வேணுகோபாலுடன் ஈகோ மோதல் இல்லை: அன்புமணி
டெல்லி:
டாக்டர் வேணுகோபாலுக்கும் எனக்கும் இடையே ஈகோ மோதல் எதுவும் இல்லை.
அவரது டிஸ்மிஸ் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்யும்என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குநர் டாக்டர் வேணுகோபால்சமீபத்தில் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள்வேலைநிறுத்தத்தில் குதித்தனர். தன்னை டிஸ்மிஸ் செய்ததை எதிர்த்து டாக்டர்வேணுகோபால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் வேணுகோபால் விவகாரம் தொடர்பாக அமைச்சர்அன்புமணி கூறுகையில், டாக்டர் வேணுகோபால், எனது அமைச்சரவையின் கீழ்உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒன்றின் இயக்குநர். அவ்வளவுதான்.
எனவே எனக்கும், அவருக்கும் இடையே ஈகோ மோதல் இருப்பதற்கான அவசியம்இல்லை. அவர் எனக்குக் கீழ்தான் உள்ளார்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மொத்தம் 17பேர். இதில் 12 பேர் எனது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
3 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அடிப்படையில்தான் அவர் டிஸ்மிஸ்செய்யப்பட்டார்.
டாக்டர் வேணுகோபாலுக்கு 62 வயது நடந்தபோது இயக்குநர் பதவியில் அவர்அமர்த்தப்பட்டுள்ளார்.
ஓய்வு வயது அது. எனவே அவரது நியமனமே முதலில் சட்டவிரோதமானது. அதுவும்5 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நியமிக்கப்பட்டது முறையே அல்ல.
அதுதான் அவரை டிஸ்மிஸ் செய்வதற்கு முக்கியக் காரணம் என்றார்.
இதற்கிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்யும் என்று டாக்டர் அன்புமணிகூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications