கண்டதேவி: திருமா., கிருஷ்ணசாமி கைது
மதுரை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் இன்று நடக்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பதுவழக்கம். இந்தத் தேரோட்டத்தில் முக்குலத்தோர் இன மக்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். தலித் மக்களுக்கு வடம் பிடித்து தேர் இழுக்கஅனுமதிக்கப்படுவதில்லை.இதற்கு புதிய தமிழகம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடந்த சிலஆண்டுகளாக கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சில கடுமையான உத்தரவுகளின் பேரில்கடந்த சில ஒரு சில ஆண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக 5மாவட்டங்களைச் சேர்ந்த 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் போலீஸார் தீவிரப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலைமதுரையிலிருந்து 1000 பேருடன் கண்டதேவி புறப்பட்டுச் சென்று தேரோட்டத்தில்பங்கேற்பேன் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் இன்று காலை கிளம்பியபோது அவரை தடுத்து நிறுத்திய போலீஸார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்தனர். அவருடன் சிலரும்கைது செய்யப்பட்டனர்.
இதேபோல மதுரையிலிருந்து கண்டதேவிக்கு புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள்கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனையும் போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications