வேணுகோபால்-அன்புமணியை நீக்க கோரும் ஜெ
சென்னை:
அகில இந்திய மருத்துவ ஆய்வு கழக (ஏஐஐஎம்எஸ்) விவகாரத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின்செயல்பாடு நாட்டுக்கே அவமானமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அந்தப்பதவியில் இருக்க அவருக்கு அருகதை இல்லாததால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்கோரியுள்ளார் ஜெயலலிதா.
இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டதாக அந்த ஆய்வு கழகத்தின் இயக்குனர்வேணுகோபாலை பதவி நீக்கம் செய்தார் அன்புமணி. ஆனால், அதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடைவாங்கி மீண்டும் பணிக்கு வந்துவிட்டார் வேணுகோபால்.இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,
அன்புமணியை பதவியை விட்டு பிரதமர் மன்மோகன் சிங் நீக்கினால் அது நாட்டுக்கு நல்லது. இந்தியா போன்றஒரு மாபெரும் நாட்டுக்கு கேபினட் அமைச்சராக இருக்க அன்புமணிக்கு வயதும் போதாதும், அனுபவமும்போதாது, தகுதியும் போதாது.
வேணுகோபால் நீக்கத்துக்கு டெல்லி உயர் நீதிமமன்றம் விதித்துள்ள தடையை பார்க்கும்போது அன்புமணிக்குபோதிய அறிவும், மெச்சூரிட்டியும் இல்லை என்பது தெளிவாகிறது.
அதே போல தயாநிதி மாறனும் கேபினட் அமைச்சர் போல பொறுப்போடு செயல்படவில்லை. தமிழ்நாட்டுக்கானஅமைச்சராகத்தான் செயல்படுகிறார். பெரும்பாலான நேரத்தை சென்னையில் தான் செலவிடுகிறார்.தமிழ்நாட்டைத் தவிரவும் வேறு மாநிலங்களும் இந்தியாவில் உள்ளன என்பதை அவர் மறந்துவிட்டார் போலும்.
நெய்வேலி பங்கு விற்பனையை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு தொழிலாளர்களின் ஒற்றுமையானபோராட்டமே காரணம் என்றார் ஜெயலலிதா.
மூன்றாவது அணி அமைப்பதாக சொன்னீர்களே.. அது எப்போ என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு நான்அவசரம் காட்டப் போவதில்லை என்றார்.
வேணுகோபால்- டாக்டர்கள் போர்க்கொடி:
இந் நிலையில் வேணுகோபால் ஜாதிப் பிரிவினையைத் தூண்டும் வகையில் நடப்பதாகவும் அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி டாக்டர்கள் சமநீதிப் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.இதன் தலைவர் விகாஸ் பஜ்பால் கூறுகையில்,
ஏஐஐஎம்எஸ்சில் வேணுகோபால் ஜாதிப் பாகுபாடு காட்டி வருகிறார். இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தைதூண்டி விட்டார். ஏஐஐஎம்எஸ் விடுதிகளில் தலித் மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதிலும்வேணுகோபாலே காரணம். தனது பதவி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்த முதல் நாளேஅவருக்கு பரிகாரம் கிடைத்துள்து. இது கவலையளிக்கும் விஷயம்.
ஆனால் எஸ்சி, எஸ்சி மாணவர்கள் மிரட்டப்படுவதை தடுக்கக் கோரி கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது எந்தநடவடிக்கையும் இல்லை. அதை 3 மாதத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications