பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கற்பழிப்பு:2 மீனவ குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
சென்னை:
சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பெண் சாப்ட்வேர் என்ஜீனியரை பலாத்காரம்செய்து கற்பழித்த மீனவ இளைஞர்கள் இருவரை ஊரை விட்டு ஒதுக்கி மீனவபஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. அவர்கள் வீட்டு சுப காரியங்களில் யாரும்பங்கேற்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகம் என்பதால் பெசன்ட் நகர்,கொட்டிவாக்கம், உத்தண்டி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதி கடற்கரைக்கு அதிகஅளவில் காதலர்களும், தனிமை விரும்பிகளும் செல்வது வழக்கம்.இதேபோல சென்னை சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண்பொறியாளர் ஒருவர் தனது காதலருடன் கொட்டிவாக்கம் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.மணலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த 3இளைஞர்கள் அங்கு வந்தனர்.
காதலரை அடித்து விரட்டி விட்டு, அந்தப் பெண்ணை கற்பழித்தனர்.
இதையடுத்து அப்பெண்ணின் காதலர், அருகில் உள்ள மீனவர் குப்பத்துக்குச் சென்றுஅங்குள்ளவர்களிடம் நடந்ததைக் கூறியதும், மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர்.
அப்போது இருவர் தப்பிவிட்டனர். ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டான். அவன்அதே குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்று தெரிய வந்தது.
தப்பியோடிய இருவரின் பெயர் குரு மற்றும் ஆறுமுகம் எனத் தெரிய வந்தது. இதில்குருவும் அதே குப்பத்தைச் சேர்ந்தவன்தான்.
இதையடுத்து பிரேம்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர் குப்பத்து மக்கள். குருவும்ஆறுமுகமும் பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது காதலரும் போலீஸில் புகார் கொடுக்காமல்சென்று விட்டனர்.
3 பேரும் கூறிய அடையாளங்களை வைத்துப் பார்க்கும்போது கற்பழிக்கப்பட்டபெண் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் புகார் மனுவைப் பெறுவதற்காக அவரைத் தேடிவருகின்றனர்.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட மீனவர் பஞ்சாயத்து குரு மற்றும் பிரேம்குமார்குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளது. மேலும் அவர்கள் வீட்டுவிசேஷங்களில் குப்பத்தைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும்உத்தரவிட்டுள்ளனர்.
பிரேம்குமாரின் தாயார் இட்லிக் கடை வைத்துள்ளார். அங்கு இனிமேல் யாரும் இட்லிவாங்கக் கூடாது எனவும், குருவின் தாயார் நடத்தி வரும் டீக் கடையில் யாரும் டீசாப்பிடக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் அவர்களையும் ஊரை விட்டுஒதுக்கி வைக்க பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. மேலும் மீனவர் குப்பத்துக்கு வரும்வருவாயில் எதையும் இருவரது குடும்பத்துக்கும் தரக் கூடாது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications