ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெடித்து சிதறியது:இன்சாட் 4சி செயற்கை கோள் ஏவுவது தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா:
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இன்சாட் 4சி செயற்கைக் கோளை ஏவுவதுதோல்வியில் முடிந்தது. செயற்கைக் கோளுடன் செலுத்தப்பட்ட சில வினாடிகளில்ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட் 4சி சென்னைஅருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்றுமாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இதுவரை இந்தியா ஏவிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுஎன்பது குறிப்பிடத்தக்ககது. இதன் எடை 2,168 கிலோ ஆகும்.
![]() |
| ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் முன் |
இந்த செயற்கைக் கோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்ஓ-2ராக்கெட் மூலம் இன்று மாலை 4.38 மணிக்கு ஏவப்படுவதாக இருந்தது.
அனைத்து ஏற்பாடுளும் முடிந்த நிலையில் ராக்கெட்டை செலுத்துவது திடீரெனதள்ளிப் போடப்பட்டது. மாலை 5.40 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் எனவிஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து மாலை 5.40மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் கிளம்பிய 5வினாடிகளிலேயே ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டின் முதல் கட்டம் பிரியாமல்போனதால் ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதன் மூலம் இன்சாட் 4சி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சிஅடைந்தனர். ராக்கெட்டின் முதல் கட்டம் சரியாக பிரியாத காரணத்தால்தான் இந்தமயற்சி தோல்வியில் டிந்ததாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
இன்சாட் 4சி செயற்கைக் கோளின் மதிப்பு ரூ. 400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியால் ராக்கெட்டுடன் சேர்த்து இஸ்ரோவுக்கு ரூ. 1,000 கோடி வரைஇழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று அக்னி ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில் இன்றுஜிஎஸ்எல்வியும் தோல்வியைத் தழுவியது விஞ்ஞானிகளை பெரும் கவலையில்ஆழ்த்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications