கண்டதேவி தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடிக்க எதிர்ப்பு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கிராமத்தில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில்தேரோட்டம் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது.
இருப்பினும் அமைச்சர் பெரியகருப்பன் தேரை வடம் பிடித்து இழுக்க எதிர்ப்புகிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் வெகுபிரபலமானது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்றுதேரோட்டம் நடைபெறும்.
1998ம் ஆண்டு தேரோட்டத்தின்போது தலித் மக்கள் வடம் பிடித்து தேர் இழுக்கககூடாது என்று பிற சமூகத்தினர் கூறியதால் பெரும் வன்முறை ஏற்பட்டு தேரோட்டம்பாதியில் நின்றது.
இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேரோட்டம் நடைபெறவில்லை.2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம்நடத்தப்பட்டது.
2003ல் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த2004 மற்றும் 2005ல் பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேரோட்டத்தை மிகவும் அமைதியானமுறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.
அதன்படி 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம்தொடங்கியது.
முதலில் நான்கு நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை ராமசாமி அம்பலம்,செம்பொன்மாரி ராமசாமி அம்பலம், பெரியகருப்பன் அம்பலம், ரமேஷ் அம்பலம்ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 36 தலித் சமூகத்தினர் வடம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மற்ற அனைவரும் வடம் பிடித்து தேரை இழுக்கத் தொடங்கினர். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனும் கலந்து கொண்டு வடம்பிடித்தார்.
ஆனால் அவர் வடம் பிடிக்க சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால்அவர் வடம் பிடிக்கவில்லை. விலகிக் கொண்டார். அமைச்சரையே வடம் பிடிக்கவிடாமல் தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேரோட்டம் நடந்து நான்கு மணிக்கு தேர் நிலையை அடைந்தது. எந்தவிதப்பிரச்சினையும் இன்றி தேரோட்டம் அமைதியாக நடந்ததால், போலீஸாரும், கோவில்நிர்வாகத்தினரும், மாவட்ட நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications