நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்!
சென்னை:
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவர் அவரை சுவற்றில் மோதிகொடூரமாக கொன்றார். பின்னர் திடீரென்று பெருக்கெடுத்த பாசத்தால், அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனாலும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்தக் கணவர்.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் அனிதா. தனியார் மருத்துவமனை ஒன்றில்நிர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவரது கணவர் ராஜு. இவர் பெயிண்டராகஇருக்கிறார்.சனிக்கிழமை இரவுப் பணியை முடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அனிதாவீட்டுக்கு வந்தார்.
அப்போது அவருக்கும், ராஜுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனதுமனைவியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்த ராஜு, அதுதொடர்பாக அவருடன்வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில் கோபமடைந்த ராஜு, அனிதாவை தரதரவென இழுத்துச் சென்று அவரதுதலையை சுவற்றில் பலமாக மோத வைத்தார். இதில் நிலை குலைந்த அனிதா மயங்கிவிழுந்தார்.
பதறிப்போன அவர் அனிதாவை கூப்பிட்டு எழுப்பப் பார்த்தார். ஆனால் அவர்எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து அவரைத் தூக்கிக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குவிந்ைதார். அங்கு மனைவி அனிதா மாடியிலிருந்து விழுந்து விட்டதாகடாக்டர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ராஜு மீது சந்தேகம் அடைந்த டாக்டர்கள் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். போலீஸார் வந்து ராஜூவை விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.அவர்களிடம் கதறி அழுத ராஜூ, நான் எனது மனைவி மீது உயிரையேவைத்திருந்தேன். ஆனால் அவரது நடத்தை குறித்து எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்துக் கேட்டபோது தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அவரை சுவற்றில் மோதிகொன்று விட்டேன் என்று கூறி கதறி அழுதார்.
போலீஸார் ராஜுவைக் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துதொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications