தாக்கரே மனைவி சிலை அவமதிப்பு: மும்பையில் சிவசேனா கலவரம்
மும்பை:
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயின் மனைவி மறைந்த மீனாவின் உருவச் சிலையை விஷமிகள்அசிங்கப்படுத்தினர். இதை கண்டித்து மாகாரஷ்டிராவில் சிவசேனை தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசேனைத் தொண்டர்கள் சிவாஜி பூங்கா எதிரே உள்ள புறக்காவல் நிலையம் மீது கல்வீசி தாக்கினார்கள்.நகரின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்தனர். தாதர், மத்திய மும்பை புறநகர் பகுதிகளில் கடைகள்அடித்து நொறுக்கப்பட்டன. நாசிக், பர்பானி, சந்திராப்பூர், அவுரங்காபாத் போன்ற இடங்களில் பஸ்கள் அடித்துநொறுக்கப்பட்டன.நாசிக்கில் பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. மும்பை மட்டுமின்றி, தானே, புனே போன்ற நகரங்களிலும் வன்முறைசம்பவங்கள் நடந்தன. விக்ரோலி புறநகர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்துக்குள் சிவசேனை கட்சியினர்நுழைந்து ரயில்கள் மீது கற்கள் வீசி தாக்கினார்கள்.
மேலும் தண்டவாளத்தில் உட்கார்ந்து மறியல் செய்தனர். இதனால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம்பாதிக்கப்பட்டது. பழைய மும்பை, புனே நெடுஞ்சாலையில் மறியல் செய்ததால் வாகன போக்குவரத்தும்தடைப்பட்டது.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேகத்கர் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலையை அவமதித்து உள்ளனர். இந்தசம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
மேலும் மும்பை போலீஸ் கமிஷனர் ஏஎன்.ராய் கூறுகையில், வன்முறையை ஒடுக்க உறுதியான நடவடிக்கைஎடுப்போம் என்றார்.
இதற்கிடையில் இந்த கலவரம் பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆலோசனைநடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications