நவீன்குமாருடன் வெறும் நட்புதான்-நடிகை நிர்மலா
சென்னை:
நான் டிவி நடிகை என்பதால் பலருடன் நட்பாக பழகும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நவீன்குமாருடன் நட்புரீதியில் தான் பழகினேன் என்று நடிகை நிர்மலா கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தார் மனோகரனின் மருமகள் மதுதேவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் டிவி நடிகை நிர்மலாவை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாகிவிட்ட நிர்மலாமுன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,எனக்கும் இந்த தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் டிவி நடிகை என்பதால் பலருடன் நட்பாகபழகும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தான் நவீன்குமாருடனும் நட்பு ரீதியில் பழகினேன். இதில் எந்ததவறும் இருப்பதாக நினைக்கவில்லை.
நவீன்குமாரின் மனைவி மதுதேவி திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த வழக்கில் என்னைபோலீசார் தேடுவதாகவும் தெரிய வந்தது. நான் நிரபராதி. எந்த தவறும் செய்யவில்லை.
என்னை போலீசார் கைது செய்வார்கள் என அஞ்சுகிறேன். எனக்கு முன் ஜாமீன் தர வேண்டும். இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.
நிர்மலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாதன், நவீன்குமாருடன் நிர்மலா நட்பு ரீதியில் தான் பழகினார்.மதுதேவி தற்கொலை வழக்கில் நிர்மலா நிரபராதி என்பதால் முன் ஜாமீன் வழங்கவேண்டும் என்றார்.
இதே போல் துணைவேந்தர் மனோகரன், அவரது மனைவி கனகவல்லி, மகள் உமா செல்லக்குமார் ஆகியோரும்உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு போலீஸ் தரப்பில் உதவி கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்தார். துணைவேந்தர் மனோகரன், கனகவல்லி,உமா செல்லக்குமார் ஆகியோர் சித்ரவதையால் தான் மதுதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே 3பேருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
நிர்மலா மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால் விசாரணையைநாளைக்கு நீதிபதி பாஷா தள்ளிவைத்தார்.
இந் நிலையில் நடிகை நிர்மலாவுக்கும், நவீன்குமார் குடும்பத்தினருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது எனமதுதேவியின் சகோதரர் கணேஷ் பாபு தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
வரதட்சணை-சித்ரவதை காரணமாகத்தான் எனது சகோதரி மதுதேவி தற்கொலை செய்து கொண்டார். 500 பவுன்தங்க நகை, ரூ. 1 லட்சம் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பாத்திரம் பண்டங்கள் கொடுத்து திருமணம் செய்து வைத்தோம்.
ஹனிமூனுக்கு சென்ற இடத்திலும் எனது சகோதரியை சித்ரவதை செய்துள்ளனர். நீலப்படங்களை போட்டு அதில்வரும் காட்சிகள் போல நடிக்க சொல்லி எனது சகோதரியை நவீன் குமார் வற்புறுத்தியுள்ளார்.
நடிகையிடம் சுகத்தை அனுபவிப்பதற்காக வரதட்சணை பணத்தை செலவு செய்துள்ளார். வெளிநாட்டுக்கும்அழைத்துச் சென்றுள்ளார். மாமனார், மாமியார், மைத்துனி அனைவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இறுதியாக ரூ. 20 லட்சம் கேட்டு சித்ரவதை செய்தனர். நிர்மலாவும் சித்ரவதை செய்ததால் மதுதேவி தற்கொலைசெய்து கொண்டார். இவர்கள் 4 பேருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது. குறிப்பாக நடிகை நிர்மலாவுக்கு முன்ஜாமீன்தரக்கூடாது என மனுவில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications