கள்ளக் காதலனுக்கு மகளை கட்டி வைக்க முயன்ற தாய்

Subscribe to Oneindia Tamil

தாம்பரம்:

கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் முயற்சித்ததால் பயந்து போன மகள் போலீஸ் நிலையத்தில்தஞ்சம் அடைந்துள்ளார்.

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முருகன் (45), இவரது மனைவி லதா (35), இவர்களது மகள்ரதி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் பிரிந்து சென்றதால், ரதி மற்றும் 2 பிள்ளைகளுடன் லதா தனியாகவசித்து வந்தார்.

இந் நிலையில் தன்னை விட 10 வயது குறைந்த வாலிபருடன் லதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதைஅக்கம் பக்கத்தினர் கேவலமாக பேசத் தொடங்கினர்.

இதனால் ஊர்வாயை மூட மகள் ரதியை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்து வைக்க லதா முயன்றார்.இதையடுத்து ரதி, வீட்டை விட்டு ஓடி தாம்பரம் அருகில் உள்ள தனது மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

ரதியை அவரது மாமா தனது வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 11ம்வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கும் தாய் லதாவும், கள்ளக் காதலனும் வந்து ரதியை மிரட்டஆரம்பித்தனர்.

இதையடுத்து ரதி, சங்கர் நகர் போலீசில் தஞ்சம் அடைந்தார். நடந்த சம்பவத்தை விளக்கிய ரதி, தாயுடன் செல்லமறுத்து விட்டார். மேலும் மாமாவுக்கும் தன்னால் இடைஞ்சல் வரும் என்று கூறி அவருடனும் செல்ல ரதிமறுத்தார்.

இதையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரதி ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரைஅனாதை இல்லம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர்.

மேலும் லதா மற்றும் அவரது கள்ளக் காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+