அதிமுக பிரமுகர் கொலை: ரவுடிகளை ஏவியது இன்ஸ்பெக்டர் அண்ட் பெண் எஸ்ஐ?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே கொரட்டூரில் சமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நாகூர் மீரான், திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகநீதிமன்றத்தில் சரணடைந்துள்ள இன்னொரு ரவுடியான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அம்பத்தூர் அருகே சமீபத்தில் எம். ஆர். ரவி என்ற அதிமுக பிரமுகர்படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்து வந்த போலீஸார்கொரட்டூர் அருகே நாகூர் மீரான் என்பவரை அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.

இவன்தான் ரவியை திட்டமிட்டுக் கொலை செய்த கும்பலின் தலைவன் என்றுபோலீஸார் தெரிவித்தனர். மேலும் நாகூர் மீரானை சுற்றி வளைத்தபோது அவன்தங்களை தாக்கியதால் பதிலுக்கு சுட்டபோது அவன் பலியானதாக போலீசார்கூறியிருந்தனர்.

இந் நிலையில் ரவி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த ஸ்டாலின் என்ற ரவுடிபொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

நீதிபதியிடம் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நாகூர் மீரான் அப்பாவி. அவரை போலீஸார் திட்டமிட்டு கொன்று விட்டனர்.உண்மையில் ாகூர் மீரானை விசாரணைக்கு வருமாறு கூறி போலீஸார் அவரதுவீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர்.

அடுத்த நாள் காலை தான் நாகூர் மீரான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் நாகூர் மீரான் மறைந்து கொண்டிருந்ததாகவும், அவனைப் பிடிக்கப்போனபோது தப்பி ஓட முயன்றதாகவும், தங்களைத் தாக்கியதாகவும், தற்காப்புக்காகஅவனைை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸார் கூறியுள்ளது பொய்.

உண்மையில், என்கெண்டரில் அவர் கொல்லப்படவில்லை. திட்டமிட்டே அவரைக்கொன்றுள்ளனர்.

நாகூர் மீரான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விட்டு ரொம்ப காலமாகிறது. திருந்திவாழ்ந்து கொண்டிருந்த அவரை திட்டமிட்டு அழைத்துச் சென்று போலீஸார்கொன்றுள்ளனர்.

நாகூர் மீரான் பார்ப்பதற்கு என்னைப் போலவே இருப்பார். எனவே அவர்தான்குற்றவாளி என்று கொல்லப்பட்ட ரவியின் கார் டிரைவர் சிவலிங்கம் போலீஸாரிடம்கூறியிருந்தார். இதன் பேரிலேயே நாகூர் மீரானை அழைத்துச் சென்று போலீஸார்கொன்றுள்ளனர்.

மேலும், முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளராக நாகூர் மீரான் செயல்பட்டுவந்தார். அவருக்கு எதிரானவர்களின் தூண்டுதலின் பேரில்தான் நாகூர் மீரான்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளான் ஸ்டாலின்.

இதற்கிடையே இன்னொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. அதிமுகபிரமுகர் ரவியைக் கொல்ல ரவுடிக் கும்பலை ஏவியதே ஒரு இன்ஸ்பெக்டரும், பெண்சப் இன்ஸ்பெக்டரும் என்பதுதான் அந்த பரபரப்புத் தகவல்.

நிலத் தகராறு தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டருக்கும், ரவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதை மனதில்வைத்தே ரவியைக் கொலை செய்ய அவர்கள் கூலிப் படையை ஏவியுள்ளதாககூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+