மணல்: பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி
நாகர்கோவில்:
மணல் கடத்திய டெம்போவை மடக்கிப் பிடித்த பெண் தாசில்தாரை ஜீப்புடன் வைத்துகொல்ல முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
தமிழகத்தில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் மணல் விலை கிடுகிடுவெனஉயர்ந்து கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் வேதனை என்னவென்றால் மணல் திருடர்களைப் பிடிக்க முயலும் அதிகாரிகள்லாரி ஏற்றிக் கொள்ளப்படுவதுதான். இந்த நிலையைத் தடுத்து நிறுத்த மணல்திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அரசுஅறிவித்து அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
![]() |
லீலா பாயுடன் தவிர உதவியாளர்கள் ராஜாசிங், பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன்சென்றனர். திக்குறிச்சி என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்ற தாசில்தார் லீலாபாய், அங்கு மணல் திருட்டை தடுக்க கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது இரண்டு டெம்போ வேன்கள் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருப்பதைப்பார்த்த லீலா பாய், அந்த டெப்போக்களை மடக்கிப் பிடித்தார்.
அவர்களைப் பார்த்தவுடன் டெம்போவில் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இதையடுத்து டெம்போக்களை தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்லலீலாபாயின் உதவியாளர்கள் முயன்றனர். அப்போது தப்பி ஓடியவர்களில் ஒருவரானடெம்போ உரிமையாளர் சுதாகரன் என்பவர் அங்கே வந்தார்.
நானே டெம்போவை தாலுகா அலுவலகத்திற்கு ஒட்டி வருகிறேன் என்று அவர்கூறவே லீலா பாயும் சரி என்று தனது ஜீப்பில் ஏறிக் கொண்டார். ஊழியர்களும்ஜீப்பில் ஏறினர்.
ஜீப்பின் பின்னால் சுதாகரன் தனது டெம்போவை ஓட்டி வந்தார். அப்போது திடீரெனவேகம் எடுத்து ஜீப் மீது தனது டெம்போவால் சுதாகரன் பலமாக மோதினார்.
இதில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. டிரைவர் ஒருவழியாக கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தார். இதில் ஜீப் முழுமையாக சேதமடைந்தது. ஜீப்புக்குள் இருந்த லீலாபாய் படுகாயம் அடைந்தார்.
மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து சுதாகரன் டெம்போவைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான்.
இந்த சம்பவம் குறித்து குழித்துறை காவல் நிலையத்தில் லீலா பாய் புகார் கொடுத்தார்.இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சுதாகரனைப் பிடித்து அவரை குண்டர்சட்டத்தின் கீழ் உள்ளே தள்ள திட்டமிட்டுள்ளனர். சுதாகரனைப் பிடிக்க போலீஸோர்தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications