ஜெர்மனி வீரர் குளோஸுக்கு தங்க ஷூ பரிசு!
பெர்லின்:
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர்மிரஸ்லோவ் குளோஸ், தங்க ஷூவை பரிசாக பெற்றுள்ளார்.
![]() |
நடந்து முடிந்த ஜெர்மனி உலகக் கோப்பைப் போட்டியில் ஜெர்மனி வீரர் குளோஸ்தான் அதிக கோல்களை அடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே கோல் அடிப்பதில்குளோஸ்தான் முன்னணியில் இருந்து வந்தார். இருப்பினும் அரை இறுதிப்போட்டியில் ஜெர்மனி துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்து போட்டியிலிருந்துவெளியேற்றப்பட்டது.
மொத்தம் 5 கோல்கள் அடித்து வீரர்களிடையே முன்னணியில் இருந்து குளோஸுக்குதங்க ஷூ கிடைத்துள்ளது. கோஸ்டாரிகா, ஈகுவடார் அணிகளுக்கு எதிராக தலா 2கோல்களும், அர்ஜென்டினாவுக்கு எதிராக ஒரு கோலையும் குளோஸ் அடித்திருந்தார்.அதிகபட்சமாக 5 கோல்கள் அடித்ததால் தங்க ஷூவை குளோஸ் தட்டிச் சென்றுள்ளார்.
ஜெர்மனி நாட்டுக்காக குளோஸ் விளையாடியிருந்தாலும் அவரது சொந்த நாடுபோலந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த தொடரில் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் கேப்டன் ஜெனடின் ஜிடேனுக்கு தங்கபந்து (கோல்டன் பால்) பரிசாக அளிக்கப்படுகிறது.
இந்தப் பரிசுக்கு ஜெர்மனி கோல் கீப்பர் உள்ளிட்ட பலரும் போட்டியில் இருந்தனர்.இருப்பினும் பிரான்ஸ் கேப்டன் ஜிடேனுக்கே அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் விளையாடிய அத்தனை ஆட்டங்களிலும் ஜிடேன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்த்தார். இறுதிப் போட்டியிலும் கூடஅவர் ஒரு கோல் போட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இத்தாலி வீரர்மாட்டரேஸியை தலையால் முட்டிக் காயப்படுத்தியதால் அவர் ரெட் கார்டுகாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
போட்டியில் வென்ற இத்தாலி அணிக்கு சுமார் ரூ. 100 கோடி பரிசாகக் கிடைக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications