கருணாநிதிக்கு ஒரு பங்களா.. கானாவுக்கு ஒரு பங்களா!
சென்னை:
தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பி வரும் திமுக எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன் (கானா)மீது வழக்கு தொடர அனுமதி தருமாறு கோரி சபாநாயகர்ஆவுடையப்பனிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் கருப்பசாமி மனு கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏவுமான கருப்பசாமி,அதிமுக அமைச்சர்களிலையே ஏழை அமைச்சர் என்று வர்ணிக்கப்பட்டவர்.ஆட்சியில் இருந்தபோது சம்பாதிக்காத நேர்மையான நபர்.இப்போதும் மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வரும் கருப்பசாமி,சங்கரன்கோவிலில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.
இந் நிலையில் கருப்பசாமி, திமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மீது வழக்குதொடர அனுமதி கேட்டு ஆவுடையப்பனுக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில், நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளரும், தென்காசி தொகுதி திமுகஎம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் என்னைப் பற்றி தவறான செய்திகளைபத்திரிகைகள் மூலம் பரப்பி வருகிறார். நான் ஏழை போல நடிப்பதாகவும், எனக்குசென்னையில் 2 பங்களாக்கள் இருப்பதாகவும் அவர் பேட்டிகள் கொடுத்துள்ளார்.
அவரது பேட்டிக்குப் பதில் அளித்த நான் அப்படி எனக்கு இரண்டு பங்களாக்கள்இருந்தால் அதில் ஒன்றை கருணாநிதியும், இன்னொன்றை கருப்பசாமி பாண்டியனும்எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தேன்.
இதைத் தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் அளித்த இன்னொரு பேட்டியில், எனதுசென்னை வீட்டு கிரகப் பிரவேசத்தின்போது நெல்லையில் இருந்து தனியார் பேருந்துமூலம் எனது கட்சியினர் சென்றதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், எனவேதனக்கும், கருணாநிதிக்கும் ஆளுக்கு ஒரு பங்களா கிடைக்கப் போவதாகவும்கூறியிருந்தார்.
இப்படி என்னைப் பற்றி தொடர்ந்து அவர் அவதூறாக செய்தி பரப்பி வருகிறார். எனதுபெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் எண்ணத்தில் கருப்பசாமிபாண்டியன் பேட்டி கொடுத்து வருகிறார்.
எனவே அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்என்று கோரியுள்ளார் கருப்பசாமி.












Click it and Unblock the Notifications