போலி எப்ஐஆர்-இன்சூரன்ஸ் மோசடி: சிபிஐவிசாரிக்க அனுமதி-சிக்க போகும் காக்கிகள்
டெல்லி:
போலி எப்.ஐ.ஆர். மூலம் தமிழக போலீஸார் ரூ. 47 கோடி வரை இன்சூரன்ஸ் மோசடிசெய்த விவகாரத்தைசிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது காவல் நிலையங்களில் போலிஎப்.ஐ.ஆர்கள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.போலி எப்ஐஆர்களை வைத்து அப்பாவிகளை மிரட்டி போலீசார் பணம் கறந்தது ஒருபக்கம் நடந்தது.
இது தவிர விபத்து நடந்ததாகவும் வாகனங்கள் காணாமல் போனதாகவும் போலிஎப்ஐஆர் போட்டுத் தந்தும், அதன்மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களில்கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இதற்கும் போலீசார் பலர் உடந்தையாக இருந்தனர்.
இதையடுத்து பல்வேறு இன்சூரன்ஸ் நறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தன. மோசடியே தமிழக போலீஸார் உதவியோடு தான் நடந்துள்ளது.இதனால் இந்த வழக்கை அவர்கள் விசாரித்தால் நியாயமாக இருக்காது. எனவே சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோரின.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இன்சூரன்ஸ் பண மோசடி வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால், தவறு செய்த போலீசாரை காப்பாற்றும் நோக்கத்தில் வழக்கை சிபிஐவிசாரிப்பதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதில், சிபிசிஐடி விசாரணையே இதற்குப் போதுமானது. எனவே சென்னைஉயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
(ஆட்சி மாறிவிட்ட நிலையில்) இன்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெறலாம் என எனக்கு தமிழக அரசிடம் இருந்துவாய் மொழி உத்தரவு வந்துள்ளது. ஒரு வார கால அவகாசம் கொடுத்தால்எழுத்துப்பூர்வமாக இதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதிமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டுமனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி,இன்சூரன்ஸ் மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்கவும் அவர்கள் அனுமதி அளித்தனர்.
இன்சூரன்ஸ் மோசடி வழக்கு சிபிஐ வசம் போயுள்ளதால், பல காக்கிகள் இதில் சிக்கிநாறப் போகின்றன. குறிப்பாக போக்குவரத்துக் காவல் துறையில் பலர் சிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications