இலங்கை: அரசியல் சட்ட திருத்த பேச்சு துவக்கம்
கொழும்பு:
அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று புலிகள்நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.
இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து யோசித்துவருவதாக கூறியுள்ள இலங்கை அரசு புலிகள், மற்றும் முக்கிய எதிர்க் கட்சியை விட்டுவிட்டு, இந்தக் கூட்டத்தைநடத்தியது.இதில் அரசியல் சட்ட நிபுணர்கள் மற்றும் பல நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் குழுவில்புலிகளுக்கு எதிரான கோஷ்டிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் குழு இன்று கொழும்பில் தனதுஆலோசனைகளை தொடங்கியது.
முன்னதாக அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்பதாகக் கூறிய முக்கிய எதிர்க்கட்சியான யுஎன்பி, அதிலிருந்து விலகிக் கொண்டுவிட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் ராஜபக்ஷே,
இனப் பிரச்சனையைத் தீர்க்க உள்நாட்டுத் தீர்வே சரியாக இருக்கும். அமைதியை ஏற்படுத்த அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த தேசிய பிரச்சனைக்கு அரசியல் மற்றும், சட்டரீதியிலான தீர்வுகாணப்பட வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் வேண்டும்.
நமது நாட்டின் பாரம்பரியத்தை மனதில் வைத்து தான் எந்த தீர்வையும் காண வேண்டும். அதிகாரம் மக்களைசென்றடைய வேண்டும். அதிகாரப் பரவல் மூலம் தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளமுடியும். இந்த அதிகாரப் பரவலாக்கல் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளதற்கு இந்தியா உள்பட பலநாடுகளை உதாரணமாக சொல்லலாம்.
விடுதலைப் புலிகளை நேரடி பேச்சுவார்த்தைக் கொண்டு வரும் என் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.அந்த முயற்சிகள் தொடரும். இதே போல வட கிழக்குப் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும்,மறுசீரமைக்கவும் எனது அரசு முக்கியத்துவம் கொடுக்கும். இதற்காக 1.25 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
இந் நிலையில் யாழ்பாணத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.இந்தக் கண்ணி வெடி மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்:
இதற்கிடையே கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.கடற்படை வீரர்களிடமிருந்து தப்புவதற்காக படகை வேகமாக செலுத்திய கண்ணன் என்ற மீனவர்கள் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 637 படகுகளில் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரெனஇலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர். தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந் நிலையில், இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக தனது படகை கண்ணன் என்பவர் வேகமாக செலுத்தினார். அப்போது அதிர்ச்சியில் மாரடைப்புஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை மற்ற மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications