ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலைபெண்ணை கற்பழித்து கொன்றதற்கு பழிக்குப் பழி
துபாய்:
கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 அமெரிக்க வீரர்களின் உடல்களை காட்டும்வீடியோ படத்தை அல் கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாதஅமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அல்-கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாத அமைப்பானஜாஹிதீன் ஷூரா கவுன்சில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின்இணைய தளத்தில் இப்படம் இடம்பெற்றுள்ளது.அமெரிக்க ராணுவ உடை அணிந்த இரு உடல்கள் அதில் காணப்படுகின்றன.சமீபத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களால் கற்பழித்துக் கொடூரமாக கொல்லப்பட்டஈராக் பெண்ணுக்கு இந்த இரு வீரர்களின் மரணத்தை அர்ப்பணிப்பதாகஅப்படத்துடன் செய்தி இடம் பெற்றுள்ளது.
இதில் ஒரு வீரரின் உடல் முற்றிலும் சிதைக்கப்பட்டுளளது. இருவரும் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரது உடலிலும் பல பகுதிகளில்சதைகளையே காண முடியவில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமாக அவர்களைதீவிரவாதிகள் சிதைத்துள்ளனர்.
உடல்களை துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடை போல தீவிரவாதிகள் துளைத்துஎடுத்துள்ளனர்.
வீடியோ படத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த இருவரும் அமெரிக்கவீரர்கள். யூசுபியா என்ற இடத்திலிருந்து இவர்களை கடத்தினோம்.
இவர்கள் இடம் பெற்றுள்ள அமெரிக்கப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களால்கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட எங்களது சகோதரிக்கு இவர்களின் மரணத்தைசமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வீடியோ படத்தின் காட்சிகள் தொடங்குவதற்கு முன்பு ஓசாமா பின்லேடனின் பேச்சும்இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் கொல்லப்பட்ட அபு சப் அல் சர்காவியின் குரலும்பின்னணியில் வருகிறது.
இந்தக் கொலைகள் குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த கருத்தும்வெளியிடப்படவில்லை.
கொல்லப்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மென்சாச்சா, தாமஸ் டக்கர் ஆகிய இருஅமெரிக்க வீரர்களும் இடம் பெற்றிருந்த படைப் பிரிவைச் சேர்ந்த 5 அமெரிக்கவீரர்கள், ஈராக்கைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கற்பழித்துக் கொன்றது மற்றும்அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை கொலை செய்ததாக கடந்த மார்ச்மாதம் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications