துரோகிகளால் தோற்ற தமிழர்கள்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

தமிழர்களின் வரலாற்றைப் பார்த்தால், நல்ல படை பலம், தலைமை இருந்தும்இடையில் இருந்த துரோகிகளால்தான் அவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்என்பது தெரியும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி பெரும் கலகம்நடந்தது. இந்திய ராணுவ சிப்பாய்கள் விபூதி பூசக் கூடாது, தாடி, மீசை வைக்கக்கூடாது, பன்றி மற்றும் பசுவின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களையே பயன்படுத்த வேண்டும், கழுத்தில் சிலுவை அணிய வேண்டும்என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்தது வெள்ளையர் அரசு.

பொங்கி எழுந்தனர் தமிழ் வீரர்கள். ஆங்கிலேய படை வீரர்களை துவம்சம் செய்தனர்.கலகத்தை அடைக்க ஆங்கிலேய அரசு பெரும் படைகளை அனுப்பி தமிழ்மறவர்களைக் கொன்று குவித்தது. இந்த வீரப் போர்தான் முதல் சுதந்திரப் போர் என்றுவரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

சிப்பாய்கள் நடத்திய இந்த கலகம் நடந்து 200 ஆண்டுகள் ஆகி விட்டன.

இதைக் கொண்டாடும் வகையில், வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் சிறப்புநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றி, சிப்பாய் கலக நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இன்று வேலூர் கோட்டையில் உங்களைசந்திக்கிறேன். விரைவில் சென்னை கோட்டையில் சந்திப்பேன் என்று தேர்தல்பிரசாரத்தின்போது கூறினேன். சொன்னதைச் செய்வது எங்களது வழக்கம். அதைசெய்து விட்டு வந்திருக்கிறேன்.

எந்த ஜூலை மாதம் 10ம் தேதி வேலூர் கோட்டையில் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்துஓடியதோ, 800 தமிழ் மறவர்கள் பிணமாகக் கிடந்தார்களோ, அந்த நாள் இந்த நாள்.

தமிழ் வீரர்கள் 200க்கும் மேற்பட்ட வெள்ளையர்களை வேட்டையாடிய நாள் ஜூலை10ம் தேதி. சிப்பாய் புரட்சி முடிந்து 200 ஆண்டுகள் முடிந்து விட்டன.

இப்போது சுதந்திரம் பெற்று விட்டோம். நாம் பெற்ற சுதந்திரக் கனல் அணல்குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவேண்டும்.

அன்றைக்கு நம் வீரர்கள் தோல்வி அடைவதற்கு சரியான தலைமை இல்லாததுதான்காரணம் என ஆற்காடு வீராசாமி சொன்னார். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

வேலூர் தவிர, மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலும் வெள்ளையருக்குஎதிராக புரட்சிகள் நடந்தன. இருந்தும் ஏன் தமிழர் படை தோற்றது?

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். இப்படிப்பட்ட துரோகிகளும் கூடவேஇருந்ததால்தான் தமிழர்களின் படை தோற்றுப் போனது.

நம் மன்னர்கள் படை பலம் கொண்டவர்களாக இருந்தும், கூடவே உடன் பிறந்தவியாதி போல துரோகிகளும் இடையே இருந்ததால் வெற்றி பெற முடியாமல்போனது.

அந்த நிலை தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் இன்று வரை உள்ளது. அதை மாற்ற முடியாது.நாம்தான் துரோகிகளை அடையாளம் கண்டு கொண்டு விலகிச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டால்தான் தமிழ்நாட்டைக்காப்பாற்ற முடியும். ஆங்கிலேயர்களை வேட்டையாடிய போதிலும் கூட தமிழ்மறவர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறவில்லை.

அங்கிருந்த ஆங்கிலேயப் பெண்களுக்கு உடுத்த உடை கொடுத்துள்ளனர். அவர்களின்மானத்தைப் பறிக்க அவர்கள் முயலவில்லை. அன்போடும், மதிப்போடும் தமிழர்கள்தங்களை நடத்தியதாக பாதிக்கப்பட்ட ஆங்கிலேயப் பெண்ணே கூறியுள்ளார்.

எதிர்கால சந்ததியினருக்கு வேலூர் புரட்சியின் வரலாற்றை நினைவூட்டும் வகையில்வேலூரில் உள்ள நினைவுச் சின்னம் விளங்கும். இருப்பினும் மேலும் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும்.

அது எப்படி இருக்க வேண்டும், எப்படி அமைய வேண்டும் என்பதை தகுதியானசிற்பிகளிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார் கருணாநிதி.

கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது:

இதற்கிடையே முதல்வர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம்தொல்காப்பியர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளது.இதன் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். செயலாளராக முன்னாள்எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளார்.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு தொல்காப்பியர் விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம்மையத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன், ஜெகத்ரட்சகன், மு.அனந்தகிருஷ்ணன், ஒளவைநடராஜன், தி.ராஜகோபாலன், வா.செ.குழந்தைச்சாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மையத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தை இலக்கியமாக படைத்துக்கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி.

பத்திரிக்கையாளராக, பத்திரிக்கை ஆசிரியராக அவர் இருக்கிறார். சங்கத் தமிழ்,குறளோவியம் உள்ளிட்ட அவரது படைப்புகள் புகழ் பெற்றவை.

சாதாரண மக்களுக்கும் தொல்காப்பியம் புரியும் வகையில், அறியும் வகையில்தொல்காப்பியப் பூங்கா என்ற நூலை எழுதியுள்ளார். மிகச் சிறந்த இலக்கியப்படைப்பாளராக திகழும் அவருக்கு தொல்காப்பியர் விருது வழங்குவது பொருத்தமாகஇருக்கும்.

விரைவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விழாவுக்கான தேதி கேட்டுப்பெறப்படும். அதன் பின்னர் நடைபெறும் விழாவில் கருணாநிதிக்கு தொல்காப்பியர்விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விருது ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+