விஜய்காந்த்: ஜெவை தடுத்தார் பணிக்கர்!
நாகர்கோவில்:
சபரிமலையில் தேவ பிரசன்னம் பார்த்த உன்னிக்கிருஷ்ண பணிக்கருக்கும், நடிகை ஜெயமாலாவுக்கும் இடையே10 வருட பழக்கம் உள்ளது என சபரிமலை தந்திரி தாழமண் கண்டரு மோகனரு குற்றம் சாட்டினார்.
நிருபர்களிடம் மோகனரு கூறியதாவது:சபரிமலையில் கடந்த 2001ம் ஆண்டு தேவ பிரசன்னம் (ஜோதிட ஆலோசனை) நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் அப்போது பரிகாரம் செய்யப்பட்டது. தற்போது சபரிமலையில் சில விரிவாக்க பணிகள்செய்யப்படுவது குறித்து பிரசன்னம் நடத்த பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கரை தேவசம் போர்டுஅழைத்தது.
![]() |
இவ்வாறு நடத்திய தேவ பிரசன்னம் ஏற்றுக் கொள்ளமுடியாதது. இது தவறு என்று தெரிந்தும் பணிக்கர் இதனைநடத்தியுள்ளார். இதற்கு தனியார் ஒருவர் செலவை ஏற்றுக்கொண்ட நிலையில் சபரிமலையின் புனிதத்தைகெடுக்கவும், அங்கு வரும் பக்தர்களின் மனதில் குழப்பத்தை ஏற்பத்தவும் பணிக்கர் திட்டம் தீட்டி சதியில்ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் அவர் உண்மையை சொல்லவேண்டியது அவசியம்.
கடந்த 1997ம் வருடம் பெங்களூரில் உள்ள ஜெயமாலா வீட்டில் உன்னிகிருஷ்ண பணிக்கர் தேவபிரசன்னம்நடத்தினார். அதுபோல் தான் சபரிமலைக்கு வந்ததாகவும் ஐயப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறி அவர்அனுப்பிய பேக்ஸ் உன்னிகிருஷ்ண பணிக்கரின் வீட்டுக்குத்தான் வந்ததுள்ளது.
இதன்மூலம் அவர்களுக்கு இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரசன்னம் நடத்தப்பட்ட ஜூன்16ம் தேதி நல்ல நாள் இல்லை என்று ஜோதிடர்கள் கூறியும் உன்னிகிருஷ்ண பணிக்கர் தேவபிரசன்னம்நடத்தியுள்ளார்.
இந்த பிரசன்னத்தில் அவர் உள்பட 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் தட்சணையாக ரூ. 25,000வீதம் 21 பேருக்கு பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் தான் பிராமணர் அல்லாததால் தன் மீது தேவசம்போர்டு குற்றம் சாட்டுவதாக அவர் தெரிவித்தது முழுக்க முழுக்க பொய்.
![]() |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், ஜோதிடராகவும் பணிக்கர் இருந்து வந்தார். அங்குஅவருக்கு நல்ல மதிப்பு, மரியாதை இருந்தது. அதனை பயன்படுத்தி பழனி கோவிலில் மாற்றங்கள் செய்யவும்,சென்னை கண்ணகி சிலையை அகற்றவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
நடிகர்கள் விஜய்காந்த், கார்த்திக் ஆகியோருடன் ஜெயலலிதாவை சேர விடாமல் ஆலோசனை தந்தார்.இதன்மூலம் ஜெயலலிதா ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஜெயலலிதாவின் ஜோதிடராக இருந்து கொண்டுஆலோசனை வழங்கி, தேர்தலில் அவர் தோற்றதால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை நிலை நிறுத்தவேசபரிமலையில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிரசன்னத்திற்கு பின் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியில் உள்ளவர்களை ஐயப்பன் வெளிகொண்டு வருவான்என கண்டரரு மோகனரு கூறினார்.














Click it and Unblock the Notifications