எல்லாமே சூப்பர் பாஸ்ட்-பரிதவிக்கும் பயணிகள்
சென்னை:
தமிழக எக்ஸ்பிரஸ் ரயில்களில் 80 சதவீத ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக்கப்பட்டுவிட்டதால் தினமும்சென்னைக்கு வந்து செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர். அடுத்து ரயிலுக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோலார்போட்டை, காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கானவர்கள் தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். படிக்கவும், அலுவகத்திற்கும், வியாபாரம்தொடர்பாகவும் இவர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.மாதந்திர சீசன் டிக்கெட்டை பயன்படுத்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இவர்கள் பயணிக்கின்றனர். ஆனால், கடந்த சிலஆண்டுகளாக பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் பல ரயில்கள் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்களாகமாற்றப்பட்டுவிட்டன. இதனால் ரயில் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டன. மேலும் இதில் சீசன்டிக்கெட்டுகளை பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் மங்களூர் மெயில், பெங்களூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை சூப்பர்பாஸ்ட் ரயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் இந்த சீசன் டிக்கெட் பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்கமுடியாத சூழ்நிலை உருவாகி விட்டது.
மாதந்திர சீசன் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த ரயில்களில் பயணம் செய்ய ஒவ்வொரு முறையும் ரூ. 10கொடுத்து துணை பயணச் சீட்டை வாங்க வேண்டும். அவசரமாக ஒடிவந்து ரயிலை பிடிக்கும் பயணிகளுக்குகட்டணத்தை விட வரிசையில் நிற்பது சிரமான காரியம்.
காரணம், ரிசையில் நின்று டிக்கெட் வாங்கி முடிப்பதற்குள் ரயில் கிளம்பியிருக்கும். இந்த ரயில்களுக்கு சீசன்டிக்கெட் வாங்க கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பட்ஜெட் போட்டு, ரயிலில் பயணித்து,சென்னைக்கு வேலைக்கு சென்று வரும் கீழ்தட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாறிவிட்டதால் தினசரி பயணிகள் பல மணி நேரம் ரயில்நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு காட்பாடி, ஜோலார்பேட்டை செல்பவர்கள் மாலையில் 5.55 மணிக்கு புறப்படும் ஏலகிரிஎக்ஸ்பிரஸ் ரயிலை விட்டுவிட்டால் அடுத்த ரயில் இரவு 9.15 மணிக்குதான். இடையில் புறப்படும்திருவனந்தபுரம் மெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை சூப்பர் பாஸ்ட் ரயில்கள். அவைஅவை வழியில் நிற்காது.
இதனால் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. எழும்பூரில்இருந்து திண்டிவனம், விழுப்புரம் செல்லும் பயணிகளின் நிலையும் இதே நிலை தான்.












Click it and Unblock the Notifications