சென்னை விமான நிலையத்தில் 1,000 கிலோஒட்டக கறி தீவைத்து எரிப்பு!
சென்னை:
துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த ஒட்டகக் கறியை யாரும் எடுத்துப்போக வராததால், விமான நிலைய ஊழியர்கள் அந்தக் கறியை தீவைத்து எரித்தனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்த ஒருபெரிய பெட்டியைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சந்தேகமடைந்தனர். அந்தப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் மாமிசம் இருப்பது தெரிய வந்தது.அது ஒட்டகக் கறியாகும். ரத்தம் உறையாத நிலையில் அக்கறி இருந்தது. ஒட்டகத்தின்கறி வெட்டப்பட்டு 24 மணி நேரம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். ஆனால்அதன் பின்னர் நாற ஆரம்பித்து விடும்.
ஒட்டகக் கறி பார்சலுக்கு ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் வரும் வரை அந்தப்பெட்டியை குளிர்சாதன அறையில் வைக்க அதிகாரிகள் முடிவு செய்து குளிர்சாதனைஅறையில் வைத்தனர்.
ஆனால் நேரம் ஆக ஆக பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. மேலும்,ஒட்டகக் கறியில் புழுக்களும் நெளிய ஆரம்பித்தன. இதையடுத்து அந்தக் கறியைஎரித்து விட முடிவு செய்யப்பட்டது.
விமான நிலையத்துக்கு வெளியே அதைக் கொண்டு போய் திறந்த வெளியில் வைத்துபெட்ரோல் ஊற்றி ஒட்டகக் கறியை விமான நிலைய ஊழியர்கள் எரித்தனர்.
இதனால் அந்தப் பகுதியே சிறிது நேரத்திற்கு நாற்றத்தால் திணறிப் போனது. இந்தஒட்டக் கறியை சென்னையைச் சேர்ந்த யாரோ ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளனர்.
ஆனால் கறி இருந்த பார்சலை வாங்க யாரும் வரவில்லை. திருமண விருந்தில்பிரியாணி செய்வதற்காக இந்தக் கறி வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications