காந்தி சிலை அருகே சிவாஜி சிலை வேண்டாமே: உயர்நீதிமன்றம்
சென்னை:
சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காந்தி சிலை அருகே நிறுவாமல் வேறுஇடத்தில் வைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே சிவாஜி கணேசன் சிலையைநிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காந்தி சிலை அருகே, டிஜிபிஅலுவலகம் எதிரே சிலையை நிறுவுவதறகான பீடம் அமைக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் காந்தி சிலை அருகே சிவாஜி சிலையை நிறுவ எதிர்ப்பு தெரிவித்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சீனிவாசன் என்பவர்இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், காந்தி சிலை முன்பாக சிவாஜி சிலை வைக்கப்படவுள்ளது. இதனால்மகாத்மா காந்தியின் முக்கியத்துவம் குறைந்து விடும். மாறாக, காந்தி பிறந்த நாள்விழா போன்ற நாட்களில் இங்கு ஏராளமான பேர் கூடுவார்கள். அப்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
நானும் சிவாஜி கணேசன் ரசிகன்தான். ஆனால் பொது நலன் கருதி சிவாஜி சிலையைதற்போது திட்டமிட்டுள்ள இடத்தில் வைக்காமல் வேறு இடத்தில் வைக்க தமிழகஅரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுவைப் பரிசீலித்த நீதிபதி, சிவாஜி கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவர் மீதுநீதிமன்றத்திற்கு மிகுந்த மரியாதை உள்ளது. சிலையை வைக்கக் கூடாது என்றுமனுதாரர் கூறவில்லை. காந்தி சிலைக்கு எதிரே வைப்பதற்குத்தான் அவர்ஆட்சேபிக்கிறார்.
வேறு இடத்தில் வைக்க அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
எனவே சிலையை வேறு இடத்தில் வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.இதுதொடர்பாக அரசின் கருத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் உத்தரவுபிறப்பிக்கப்படும் என்றார்.
இதையடுத்து வழக்கை திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications