அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது ஐ.என்.டி.யூ.சி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தமிழகஐ.என்.டி.யூ.சியின் பொதுச் செயலாளர் காளன் மீண்டும் காங்கிரஸில் இணைவதாகஅறிவித்துள்ளார்.
தமிழக ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம், கடந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கும்தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைக் கோரியது.ஆனால் கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்தஐ.என்.டி.யூசி தலைவர் சுப்பையா, பொதுச் செயலாளர் காளன் ஆகியோர்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர்.
இந்த அமைப்புக்கு 2 சீட் தரப்பட்டது. வில்லிவாக்கம் மற்றும் சிங்காநல்லூரில் இந்தஅமைப்பின் வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடடனர்.வில்லிவாக்கத்தில் காளனும், சிங்காநல்லூரில் சின்னச்சாமியும் போட்டியிட்டனர்.
இருவரும் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்து இரட்டை இலைச் சின்னத்தில்போட்டியிட்டனர். இதில் சின்னச்சாமி மட்டும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக காளன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
இதனால் அமைப்பில் பிளவு ஏற்பட்டது போல சிலர் செய்தி பரப்பினர். உண்மைஅதுவல்ல. அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவ ரெட்டிசென்னை வந்துஇரு தரப்பிலும் பேசினார்.
எனக்கும், தலைவர் சுப்பையாவுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றுஅனைவரிடம் ரெட்டி அறிவித்தார். இதன் மூலம் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதிமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகுகிறோம். காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியின் தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம். எங்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் தரப்படும் என சஞ்சீவ ரெட்டிதெரிவித்துள்ளார்.
நாங்கள் மீண்டும் காங்கிரஸுக்குப் போவது குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவித்துவிட்டேன். அதில் அவருக்கு ஒரு மன வருத்தம் இலலை என்றார் காளன்.
அதிமுகவில் கூட்டணியில் இருந்து காளன் விலகினாலும், அவருடன் சென்றசின்னச்சாமி எம்எல்ஏ தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்க முடிவு செய்துள்ளார்.இதையடுத்து அவரை காளன் ஐஎன்டியூசில் இருந்து நீக்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications