அதிமுக அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: நடிகர் சிவக்குமாருக்கு வீண் தலைவலி!
சென்னை:
சென்னை தி.நகர், பாண்டி பஜார் ஆகிய இடங்களில் இன்னும் சில நாட்களில் பயங்கரவெடிகுண்டுகள் வெடிக்கும் என்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்குதொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமைக் கழகஅலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஒரு நபர் இரண்டு முறை போன் செய்துபேசி, தி.நகர், பாண்டி பஜாரில் இன்னும் சில நாட்களில் பயங்கர குண்டுகள்வெடிக்கும் என்று கூறியுள்ளான்.ஜூலை 14, 15 ஆகிய நாட்களில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்றும் தேதிகுறிப்பிட்டு அந்த நபர் பேசினான். மேலும் சென்னை நகரில் 5 தீவிரவாதிகள்ஊடுறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தான்.
ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசிய அந்த நபர் தன் பெயர் லாலு என்றும் கூறினான்.
மேலும் குண்டு வைக்கப் போகும் தீவிரவாதி ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும்,அந்த வீட்டின் தொலைபேசி எண் இது தான் என்றும் கூறி ஒரு நம்பரையும்சொன்னான். அந்த நம்பரை அதிமுக அலுவலகத்தில் இருந்தவர்கள் குறித்துக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநகர காவல்துறைஆணையர் லத்திகா சரணை நேரில் சந்தித்து இதுதொடர்பாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மிரட்டல் தொலைபேசிஅழைப்பு ஆந்திராவில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த மர்ம மனிதன்குறிப்பிட்ட சென்னை தொலைபேசி எண்ணை போலீசார் ஆராய்ந்தபோது அது நடிகர்சிவக்குமார் வீட்டு தொலைபேசி என்றும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சிவக்குமார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், வீட்டில்யாரும் இல்லை. அனைவருமே சூட்டிங்கில் இருப்பதாக காவாலளி தெரிவித்தார்.
பின்னர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். குழம்பிப் போனசிவக்குமார், என் வீட்டில் தீவிரவாதியா? யாரோ ஒருவன் வேண்டும் என்றே எண்வீட்டு நம்பரை உங்களுக்குத் தந்திருக்கிறான் என்றார்.
இதுகுறித்து லத்திகா சரண் கூறுகையில், ஹைதராபாத்தில் இருந்து தான் அந்தவெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்தவனை கண்டுபிடிக்க ஆந்திரபோலீஸ் உதவியை நாடியுள்ளோம்.
சிவக்குமர் மீது நாங்கள் சந்தேகப்படவில்லை. சிவக்குமார் வீட்டிலிருந்துதொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியான தகவல் தவறு என்று விளக்கம் தந்தார்.
அதே நேரத்தில் பாண்டிபஜார், தி.நகர் ஆகிய பகுதிகளில் தீவிர பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. இதுதவிர தரமணியில் உள்ள டைடல் பூங்கா, பிற சாப்ட்வேர்நிறுவனங்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்லத்திகா சரண்.
கதை சொன்னவன் கிளப்பிய புரளி?:
இதற்கிடையே தன்னிடம் கதை கேட்கச் சொல்லி தொந்தரவு செய்த ஒரு நபர்தான்இதுபோல வதந்தியைக் கிளப்பி விட்டிருப்பதாக சிவக்குமார் கூறியுள்ளார்.
இந்த குழப்பம் குறித்து அவர் கூறுகையில்,
கடந்த 20 நாட்களாக என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர்தன்னிடம் நல்ல கதை இருப்பதாகவும், கேட்குமாறும் கூறினார். ஆனால் இதுபோலநிறைய போன் வரும் என்பதால் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
திடீரென ஒரு நாள் அந்த ஆசாமி தொலைபேசியில் அழைத்து சூர்யாவைக்கூப்பிடுங்கள், சிவக்குமாரை கூப்பிடுங்கள், நான் பேச வேண்டும். நான் கதைகூறினால் அதை அவர்கள் கேட்க மாட்டார்களா, பேச மாட்டார்களா என்று வீட்டுவேலையாட்களிடம் மிரட்டினான்.
சரி என்று நான் போனை வாங்கி என்ன என்று கேட்டபோது, ஏன் போனைத்துண்டிக்கிறீர்கள் என்று கோபப்பட்டார். தனது பெயர் டத்தோ என்றும்மலேசியாவிலிருந்து பேசுவதாகவும் அந்த நபர் கூறினார்.
அவரிடம் நானும், சூர்யாவும் கதை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் இவ்வாறு புரளிகிளப்பி விட்டுள்ளார் என்று நினைக்கிறேன் என்றார் சிவக்குமார்.












Click it and Unblock the Notifications