சென்னை பல்கலை துணைவேந்தர் விலக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன் உடனடியாகஅப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தியாகராஜன் மீது சமீபத்தில் அலுவலர்கள்,ஆசிரியர்கள் சங்கம் பரபரப்பு புகார்களை தெரிவித்தது. செனட் சபையை புதுப்பிக்கும்பணியில் பெரும் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், துணைவேந்தர் தியாகராஜன்பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்தப் புகார்களை மறுத்த தியாகராஜன், தான் பதவியிலிருந்து விலகப் போவதில்லைஎன்றும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடப்பதென்ன என்றதலைப்பில் ஒரு கூட்டம், சென்னை பொறியாளர் கழகத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவைத் தலைவர் தெய்வசுந்தரம்பேசுகையில், தியாகரஜானின் பல கோடி நிதி மோசடி தொடர்பாக சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றதிதல்தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடியும்போது அவர்கள் மீது அவதூறு பரப்புவதுபல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலை என்று தியாகராஜன் கூறியுள்ளார். அவர்மட்டும்தான் ஆசிரியர், அவர் மட்டும்தான் ஆராய்ச்சியாளர், அவர் மட்டுமேபல்கலைழக நலனைப் பாதுகாப்பவர் என்ற நினைப்பில் செயல்படுகிறார்தியாகராஜன்.

தன் விருப்பபடி துறைத் தலைவர்களை நியமிக்கிறார், தன் விருப்பப்படி டீன்களைநியமிக்கிறார். இதை விட பெரிய பதவியை டெல்லியில் பிடிக்க வேண்டும்என்பதற்காக டெல்லி, கொல்கத்தா என பறந்து கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு பெயரிரளவில் ஒப்பந்தங்கள் போடுகிறார்.இதைத் தட்டிக் கேட்டு எதிர்த்ததால், ஆசிரியர் பேரவை மீது கோபம் கொண்டுஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துகிறார்.

முந்தைய துணைவேந்தர் மீது தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டவுடன்,அவருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர் தியாகராஜன். துணைவேந்தர்பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இப்போது இவருக்குஒரு நீதியா? என்றார் தெய்வசுந்தரம்.

பல்கலைக்கழக அலுவலர் பேரவை தலைவர் முனுசாமி பேசுகையில், உண்மைக்குப்புறம்பாக வரும் கடிதங்களை பரிசீலித்துப் பார்க்காமல், சீர்தூக்கிப் பார்க்காமல் வருகிறகடிதங்களை எல்லாம் லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு அனுப்பி விடுகிறார்தியாகராஜன். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் புகார்கொடுக்கவுள்ளோம்.

துணைவேந்தர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்முனுசாமி.

பின்னர் ஊழல் புகாருக்குப் பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை தியாகராஜன்ராஜினாமா செய்ய வேண்டும். புதிய துணைவேந்தர் தலைமையில் புதுப்பிக்கப்பட்டசெனட் சபையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+