கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 6 அரசு சாட்சிகள் பல்டி!
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் 6 பேர் தங்களதுமுந்தைய சாட்சியத்தை மாற்றிக் கூறினர்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது வக்கீல்களின் வாதங்கள் நடந்துவருகின்றன. குண்டு வைக்க நடந்த சதி குறித்த தனது வாதத்தை அரசு வழக்கறிஞர்வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.அப்போது அரசுத் தரப்பில் ஆஜர் செய்யப்பட்ட 19 சாட்சிகளில் 6 சாட்சிகள் பல்டிஅடித்தனர்.
செந்தில்குமார் என்ற சாட்சி முதலில் அளித்த சாட்சியத்தில், அன்சாரி, அல் உம்மாதலைவர் பாஷாவின் சகோதரர் நவாப்கான், தடா ஒசிர், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கோட்டைமேட்டில் உள்ள தங்கப்பாஎன்பவரின் சகோதரி இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 18முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க வேண்டும் என்று அவர்கள்பேசினர் என்று தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த சாட்சியத்தை மாற்றி அவர் கூறினார். இதேபோல காவலர்கள் கலைச்செல்வன், ராஜன், சஞ்சய் சைபுல்லா ஆகியோரும் ஏற்கனவே கூறிய சாட்சியத்தைமறுத்து மாற்றிக் கூறினர்.
சென்னை திருவல்லிக்கேணியில் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது வாரம்,அன்சாரி, நவாப்கான், தடா ஒசிர், பாசித், அஸ்லம், தடா அஸ்லம், சிராஜுதின்,சம்சுதின் ஆகியோர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சதி ஆலோசனையில்ஈடுபட்டிருந்ததாக இந்த 3 சாட்சிகளும் கூறியிருந்தனர்.
இதேபோல கோபாலகிருஷ்ணன், வேலுச்சாமி ஆகியோரும் ஏற்கனவே கூறியவாக்குமூலத்தை மறுத்தனர். 6 சாட்சிகள் பல்டி அடித்திருப்பினும் கூட வழக்குஇன்னும் வலுவாக உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications