இளையராஜா-ரஜினியை சந்திக்க சென்னைக்கு ஓடி வந்த கோவை பெண்
சென்னை:
ரஜினியைப் பார்த்து அவர் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பாடுவதற்குவாய்ப்பு வாங்குவதற்காக கோவையிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிசென்னைக்கு வந்த இளம்பெண்ணை போலீஸார் மீட்டு அவரது பெற்றோரிடம்ஒப்படைத்துள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை இரவுபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பர்தா அணிந்த ஒரு பெண் ரயில்நிலையத்தில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்.மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிரக்கண்காணிப்பில் இருந்ததால், அந்தப் பெண் குறித்து ஏழுமலைக்கு சந்தேகம் வந்தது.இதையடுத்து அப்பெண்ணிடம் சென்று யாரு நீங்க, எங்கே போக வேண்டும் என்றுகேட்டுள்ளார்.
அதற்கு அப்பெண் நான் தி.நகர் போக வேண்டும் என்று கூறினார். ஆனால் அடுத்தவிநாடியே, அரசு மருத்துவமனையில் உறவினர்களை சேர்த்துள்ளனர், பார்க்கவந்தேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஏழுமலையின் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அப்பெண்ணை அரசுபொது மருத்துவமனை காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணைநடத்தப்பட்டது. அப்போது அந்தப் பெண் கூறிய தகவல்கள் போலீஸாருக்கு பெருத்தநிம்மதியைக் கொடுத்தது.
அதாவது அப்பெண் கோவை டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த சிராஜுன்னிசா. தந்தைபெயர் இஸ்மாயில், தாயார் பெயர் கார்த்திம் நிஷா. சிராஜுன்னிஷா தீவிர சினிமாபைத்தியம்.
நல்ல குரல் வளம் கொண்ட இவருக்கு இளையராஜா இசையில் பாட வேண்டும் என்றுரொம்ப நாளாக ஆசை இருந்தது. இதுகுறித்து தனது தாயாரிடம் சொன்னபோது அவர்சத்தம் போட்டுத் திட்டியுள்ளார்.
சினிமா நினைப்பை விட்டு விடு என்றும் கூறியுள்ளார்.
இதனால் கவலை அடைந்த சிராஜுன்னிசா தனது தோழிகளிடம் கூறிவருத்தப்பட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரஜினியைப் பார்த்து பேசினால் நிச்சயம்உதவுவார் என்றார். இதையடுத்து சென்னைக்குக் கிளம்பி ரஜினியைப் பார்க்க முடிவுசெய்தார் சிராஜுன்னிசா.
இதையடுத்து வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பிய அவர் ரயில் மூலம் சென்னைசென்டிரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். ரஜினி வீட்டுக்கு எப்படிப் போவது என்றுதெரியாமல் குழம்பிய அவர் அப்போதுதான் நிலையை உணர்ந்து பயத்தில்மூழ்கியுள்ளார்.
அப்போதுதான் அவரை ஏழுமலை பார்த்து விசாரித்துள்ளார்.
இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், கோவையில் உள்ள சிராஜுன்னிசாவின் வீட்டுக்குபோலீஸார் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
அவர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்களிடம் சிராஜுன்னிசாவைஒப்படைத்த போலீஸார், சிராஜுன்னிசாவுக்கு பல அறிவுரைகளை வழங்கினர்.அவரது பெற்றோருக்கும் அட்வைஸ் செய்து பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்தில் இருந்த சிராஜுன்னிசாவிடம் போலீஸார், நல்லா பாடுவியேன்னுசொன்னியே ஒரு பாட்டு பாடு பார்ப்போம் என்ற கூற, இளையராஜா இசையில்எஸ்.ஜானகி பாடிய ஒரு சூப்பர் ஹிட் பாட்டை அற்புதமாக பாடி காவலர்களைஆச்சரியப்படுத்தினாராம் சிராஜுன்னிசா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications