சிவக்குமாரிடம் மன்னிப்பு கேட்ட வெடிகுண்டு மிரட்டல் ரசிகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சிவக்குமார் வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், சென்னை தி.நிகர்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தமலேசிய நபர் சிவக்குமாரைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நபரை மன்னித்து பிரச்சினையை அப்படியே விட்டு விடும்படிசிவக்குமார் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர், தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் வெடிகுண்டுவைப்பதற்காக ஒரு கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாகவும், அந்த தீவிரவாதிகள்இங்கு தங்கியுள்ளார்கள் என்று கூறி அந்த வீட்டின் தொலைபேசி எண்ணையும் கூறிபோனை வைத்துள்ளார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல்துறை ஆணையரைநேரில் சந்தித்து இதுகுறித்துத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில்இறங்கியபோது மர்ம நபர் கொடுத்த தொலைபேசி எண் நடிகர் சிவக்குமார் வீட்டுஎண் எனத் தெரிய வந்தது.

இதனால் குழப்பமடைந்த போலீஸார் விசாரணையில் இறங்கியபோது சிவக்குமார் மீதுகொண்ட கோபத்தால் அந்த மர்ம நபர் சிவக்குமார் வீட்டு எண்ணைக் கொடுத்ததுதெரிய வந்தது. மேலும் அவர் யார் என்பதும் தெரிய வந்தது.

மலேசியாவைச் சேர்ந்த அவரது பெயர் காசி டத்தோ. இஸ்லாமியரான அவர் கதைசொல்வதற்காக சிவக்குமார், சூர்யாவிடம் பேச முயன்றுள்ளார். ஆனால்முடியவில்லை.

இதனால் ஆத்திரத்தில் சிவக்குமார் வீட்டு தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டுதீவிரவாதிகள் அங்கே இருக்கிறார்கள் என புரளி கிளப்பி விட்டு விட்டார்.

மீண்டும் அந்த நபர் பேசக் கூடும் என்று எதிர்பார்த்த போலீஸார், சிவக்குமார் வீட்டுத்தொலைபேசியில், பேச்சை பதிவு செய்யும் கருவியைப் பொருத்தினர். இந்தநிலையில் காசிடத்தோ மீண்டும் தொலைபேசியில் அழைத்தார்.

ரிசீவரை எடுத்து சிவக்குமார் பேசினார். அப்போது டத்தோ, சார் நான் உங்களோடதீவிர ரசிகன். உங்க மேல் உயிரையே வைத்துள்ளேன். இப்போது போனில் பேசியதுபோல முன்பே நீங்கள் பேசியிருந்தால் இப்படி ஒரு காரியத்தை நான் செய்திருக்கமாட்டேன். என்னை நீங்க மண்ணிக்கனும்.

தமிழ்நாடு முழுக்க அனாவசியமாக உங்க மேலே ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இன்னுக்கு நான் தர்கா போய் அல்லாகிட்ட நான்பண்ணின தப்புக்கு மன்னிப்பு கேட்பேன்.

உங்க மீது உள்ளஅதீத வெறியில் தான் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி விட்டேன்.அளவு கடந்த அன்பினால் செய்த இந்த காரியத்தை மன்னிச்சிடுங்க என்றுகெஞ்சியுள்ளார்.

டத்தோவின் பேச்சு அடங்கிய கேசட் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தன் மீது அன்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டத்தோ மீதுஎந்த வழக்கும் போட வேண்டாம், அவரை மன்னித்து விட்டு விடுங்கள் என்றுகாவல்துறை ஆணையருக்கு சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+