சிவாஜி சிலைக்கு மாற்று இடம்: கருணாநிதி ஆய்வு
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை வேறு இடத்தில் வைப்பது தொடர்பாகமாற்று இடங்கள் சிலவற்றை முதல்வர் கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
சிவாஜிகணேசனுக்கு கடற்கரையில் சிலை வைக்க முடிவு செய்த தமிழக அரசு, காந்திசிலை அருகே, ராணி மேரிக் கல்லூரி எதிரே சிலையை நிறுவப் போவதாகஅறிவித்தது.இதற்கான வேலைகளும் முடிந்து விட்டன. இந்த நிலையில் காந்தி சிலை அருகேசிவாஜி சிலையை வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் காந்தியின் முக்கியத்துவம்குறைந்து விடும் என்று கூறி சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை காந்தி சிலை அருகேநிறுவாமல் வேறு இடத்தில் வைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்குமாறு கோரிக்கைவிடுத்தனர். மேலும் மாற்று இடம் தொடர்பாக திங்கள்கிழமையன்று தமிழக அரசுஅறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து சிவாஜி சிலையை வேறு இடத்தில் வைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக சில மாற்று இடங்களைத் தேர்வு செய்து அதிகாரிகள்,முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தனர்.
அதன்படி தியாகராயர் சாலை-செவாலியே சிவாஜி சாலை சந்திப்பு (இந்தசாலையில்தான் சிவாஜியின் வீடு உள்ளது), சிந்தாதிரிப்பேட்டை- அண்ணா சாலைசந்திப்பு, கடற்கரையில் வேறு இடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் சிலையைவைக்கலாம் என அதிகாரிகள் கருணாநதியிடம் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த இடங்களை நேற்று அதிகாலையில் கருணாநிதி காரில் சென்றுநேரில் பார்த்து ஆய்வு செய்தார். 21ம் தேதி சிலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றே சிலையை திறந்து விட கருணாநிதி தீவிரமாக உள்ளார். எனவே மாற்றுஇடத்தில் சிலையை நிறுவுவது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications