கன்னியாகுமரியில் தனியார் மருத்துவ கல்லூரி
டெல்லி - சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ முகாம்பிகை கல்லூரி மருத்துவக் கல்லூரி தொடங்குகிறது.இதற்கான அனுமதியை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாகர்கோயில், திருவனந்தபுரம் இடையே உள்ள குலசேகரத்தில் ஏற்கெனவே பல் மருத்துவக் கல்லூரி, மருந்தியல்கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகியவற்றை ஸ்ரீ முகாம்பிகை மருத்துவ அறிவியல் மையம் என்ற பெயரில் டாக்டர்வேலாயுதம் பிள்ளை அறக்கட்டளை நடத்தி வருகிறது.இப்போது மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்தக் கல்வி ஆண்டிலேயே 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் இந்தக் கல்லூரி செயல்படத்தொடங்கும்.
65% இடங்கள் கேட்கும் தமிழக அரசு:
இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளிடம் பெற்றதைப் போன்று தமிழகத்தில் உள்ள மூன்று தனியார்மருத்துவக் கல்லூரிகளிடமும் அரசு ஒதுக்கீட்டுக்கு 65% இடங்களை தமிழக அரசு கேட்டு வருகிறது.
ஆனால், அரசு ஒதுக்கீட்டுக்கு 50% இடங்களை மட்டுமே அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகிய மூன்று தனியார் மருதுவக் கல்லூரிகளிலும்மொத்த 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுவிட்டது.முடிவுகள் வரும் 24ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து ஒப்பந்தம்ஏற்பட்டுவிடம் என்று தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications