உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட வக்கீல் கைது!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய வக்கீலை தட்டிக் கேட்கவந்த அவரது மனைவியின் உறவினர்கள் மீது அந்த வக்கீல் துப்பாக்கியால் சுட்டார்.இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன்.இவர் ஒரு வழக்கறிஞர். தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திவந்தார் தமிழ்ச் செல்வன்.இதை அறிந்த அந்தப் பெண்மணியின் உறவினர்கள் நேற்று இரவு தமிழ்ச் செல்வன்வீட்டுக்கு வந்தனர். தங்களது பெண்ணைக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகதமிழ்ச்செல்வனை தட்டிக் கேட்டனர்.
அப்போது கோபமடைந்த தமிழ்ச் செல்வன் தனது துப்பாக்கியை எடுத்து திடீரெனசுட்டார். இதில் முருகையா பாண்டியன் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாகஅவரை நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தமிழ்ச் செல்வனைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications