மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர்
தஞ்சாவூர்:
மனைவியை அடித்து கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை பூக்காரத் தெருவில் ஒரு பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தவர்கள் ராமசாமி(65), மனைவிராஜம்மாள் (55).22 வருடங்களாக அங்கு வசித்து வந்தனர். இந் நிலையில் கடந்த ஒருமாத காலமாக ராஜம்மாளை காணவில்லைஎன ராமசாமி கூறி வந்தார்.
ஆனால், நேற்று காலை தோட்டத்தின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப் பகுதியினர்அருகில் சென்று பார்த்தார். அப்போது ராஜம்மாளின் உடல் அதில் மிதந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. பிணத்தை மீட்ட போலீசார் ராமசாமியிடம் விசாரித்தபோது,
ராஜம்மாள் என் மனைவியே அல்ல. 22 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தில்தஞ்சாவூருக்கு வந்தோம். தோட்டத்தில் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தோம்.
கடந்த மாதம் 25ம் தேதி, எனக்கும் ராஜம்மாளுக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டது. கோபமடைந்த நான்,ராஜம்மாளை அறைந்தேன். தடுமாறி கீழே விழுந்தவர் அப்படியே இறந்து விட்டார்.
இதையடுத்து உடலை கிணற்றில் வீசினேன் என்றார் ராமசாமி. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications
