மீண்டும் வருகிறது லாட்டரிச் சீட்டு?
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனைக்குமீண்டும் அனுமதி அளிக்க திமுக அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது.
கடந்த 1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது லாட்டரிச் சீட்டுஅறிமுகப்படுத்தப்பட்டது. விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு என்றவிளம்பரத்துடன் அதை அறிமுகம் செய்தார் அண்ணா.அன்று முதல் தமிழக மக்களின் பணத்தை சுரண்டி வந்த லாட்டரிச் சீட்டுக்களுக்குகடந்த 2003ம் ஆண்டு அதிமுக அரசு தடை விதித்தது.
தமிழகம் முழுவதும் முதல் முறையாக லாட்டரிச் சீட்டுக்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான லாட்டரிச் சீட்டு வியாபாரிகளும், அவர்களதுகுடும்பங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்த விற்பனையில் ஈடுபட்டிருந்தபார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இருப்பினும் தமிழக அரசின் நடவடிக்கைகக்கு பாமக உள்ளிட்ட பல்வேறுகட்சிகளும், பொதுமக்களும், தாய்மார்களும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் லாட்டரி சீட்டுக்கள் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தன.ஆனால், இதை வாங்குவதில் மக்களிடையே நிலவிய மோகத்தைப் பயன்படுத்திகள்ளத்தனமாக பல லட்சம் போலி லாட்டரிச் சீட்டுக்களை வியாபாரிகள் அடித்து விற்கஆரம்பித்ததால் பல லட்சம் ஏழை மக்கள் சுரண்டப்பட்டனர்.
மேலும் ஒரு நம்பர் லாட்டரி, சுரண்டல் லாட்டரிச் சீட்டுக்கள் ஏழை மக்களின்வயிற்றில் அடிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது போல பெரும் மோசடியில்இறங்கின.
லாட்டரிச் சீட்டுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக் கூலிகள். கடன் வாங்கியாவது சீட்டுவாங்கும் நிலைக்கு பலர் வந்துவிட, அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
எனவே லாட்டரிச் சீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விற்பனைக்குத் தடை விதித்தது.
பல லட்சம் குடும்பங்களை இந்தத் தடை காப்பாற்றினாலும் இந்தத் தொழிலை நம்பிஇருந்த கண் பார்வையற்றவர்கள், ஊனமுற்றோர், இதைத் தவிர வேறு பிழைப்புதெரியாதவர்கள் நிர்க்கதிக்கு ஆளாகினர்.
லாட்டரிச் சீட்டு விற்பனையை றைப்படுத்தி மீண்டும் விற்பனைக்கு அனுமதி தரவேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர். ஆனாலும் அதிமுக அரசு அதைகண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையைப்புதுப்பித்து திமுக அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்தத் தொடர் கோரிக்கை குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகக்கூறப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு மீண்டும்அனுமதி தரலாமா என்பது குறித்து தமிழக அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வரும் பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகக் கூடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications