சீனாவின் சவாலை சந்திக்க இந்தியா தயார்-தயாநிதி
லண்டன்:
தகவல் தொழில்நுட்பத் துறையில் சீனாவின் போட்டியை இந்தியா வரவேற்கிறதுஎன்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தயாநிதிமாறன் பேசுகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் சீனா போன்ற நாடுகளின்சவால்களை சந்திக்க இந்தியா பயப்படவில்லை.இது பெரிய துறை. யார் வேண்டுமானாலும் இதில் போட்டியிடலாம். ஆய்வு மற்றும்மேம்பாட்டுப் பிரிவில் இந்தியா தீவிர கவனம் செலுத்தவுள்ளது.
முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகள்இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின்னணு நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்த இந்திய அரசு தீவிரமாக உள்ளது.இதுதொடர்பான பொதுத் திட்டம் 2007ம் ஆண்டில் தயாராகி விடும்.
இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று பெங்களூர் கருதப்பட்டாலும் கூட அடிப்படைக்கட்டமைப்பு, வேகமான வளர்ச்சியை சமாளிக்க முடியாமல் பெங்களூர் திணறிவருகிறது. அதேசமயம், சென்னை, ஹைதராபாத், புனே, நோய்டா ஆகிய நகரங்கள்அதிவேமாக வளர்ந்து வருகின்றன.
இதேபோல ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் இத்துறையில்நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன என்றார் தயாநிதி மாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications