பொடா: ஜெ.வுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை பழிவாங்கும் அஸ்திரமாக பயன்படுத்தியஜெயலலிதா, அச்சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றுகோருவது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவரும், மக்கள் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளருமானபழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தை தாறுமாறாக, தவறாக,பழிவாங்கும் அஸ்திரமாக பயன்படுத்தியவர் ஜெயலலிதா.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அரசியல்எதிர்ப்பாளர்களை பழிவாங்க பொடாவை பயன்படுத்தியவர்ஜெயலலிதா.

என் மீதும், எனது இயக்கத் தோழர்கள் மீதும் பொடா சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு எந்த வித தவறும், முகாந்திரம்இல்லை என்று பொடா மறு ஆய்வுக்குழு கூறியும் கூட அதை ஏற்காமல்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ஜெயலலிதாஅரசு.

தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,தேவையில்லாமல் 525 நாட்கள் சிறையில் கழித்தவர்கள் பட்டபாட்டுக்கும், மனக் கஷ்டத்திற்கும் இப்போது யார் பொறுப்பேற்பது?

எனவே இதுபோன்ற சட்டங்கள், தவறானவர்களின் கைக்குச் சென்றால்மக்கள் நிலை மிகவும் மோசமாகி விடும். தீவிரவாதத்தைக்கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் உள்ளன. எனவே பொடாவைமீண்டும் கொண்டு வருவது தேவையற்றது என்று கூறியுள்ளார்நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+