இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவை இன்று மிக சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் இது 7. 2 என்றஅளவுக்குப் பதிவானது. இதில் குறைந்தபட்சம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த பூகம்பத்தையடுத்து ஜாவா, சுமத்ரா, பாலி, கோகஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவின் கிருஸ்துமஸ் தீவுஉள்ளிட்ட பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு தெற்கே கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படிபகல் 1.49 மணிக்கு இந்த பூகம்பம் தாக்கியது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தில் தலைநகர்ஜகார்தா உள்பட பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
ஜாவாவில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பலர் பலியாகியுள்ளனர். இதுவரை 5 பேரின் உடல்கள்மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த பூகம்பம் காரணமாக சிறிய அளவில் சுனாமி அலைகள் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என பசிபிக்சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசிய கடற்பகுதியில் 9.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டபயங்கர சுனாமி அலைத் தாக்குதலால் தமிழகம் உள்பட ஆசிய பகுதிகளி கடும்பாதிப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications