எஸ்.எஸ்.சந்திரன் தம்பி மகனுக்கு சிறையில் அடி, உதை!
மதுரை:
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன்தனசேகரனை, அங்கு அடைக்கப்பட்டுள்ள திமுகவினர் கடுமையாகத் தாக்கியதில்தனசேகரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகர் எஸ்.எஸ். சந்திரனின் தம்பி மகன் தனசேகரன். இவர் மீதும், எஸ்.எஸ்.சந்திரன்குடும்பத்தினர் மீதும் தனசேகரனின் மனைவி லதா மதுரை போலீஸில் வரதட்சணைக்கொடுமை புகார் கூறினார்.இதன் பேரில் தனசேகரன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனசேகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த கைதிகளுடன் தனசேகரன் பேசிக் கொண்டிருக்கும்போதுமுதல்வர் கருணாநிதி குறித்து பேசியதாக தெரிகிறது.
கருணாநிதியை தனசேகரன் விமர்சித்ததைக் கேட்ட அங்கிருந்த சில கைதிகள்,தனசேதகரனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். கடுமையாகதாக்கப்பட்டதால் அவரை மதுரை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.
தாக்குதல் நடத்தியது, மதுரை வில்லாபுரம் சிபிஎம் கவுன்சிலர் லீலாவதியைக் கொலைசெய்து தண்டனை பெற்ற திமுகவினர் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகமீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திமுக கைதிகளிடம் சிறை அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.












Click it and Unblock the Notifications