நடராஜர் கோவிலை தீக்ஷிதர்களிடமிருந்து மீட்க வேண்டும்: திருமா.
திட்டக்குடி:
தமிழுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்துசிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை படிப்பதற்காகச்சென்ற புலவர் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலீஸார் 2நாட்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.இதனால் நடுச் சாலையில் ஆறுமுகச்சாமி திருவாசகத்தைப் பாடினார். நடராஜர்கோவிலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தீக்ஷிதர்கள், கோவிலுக்குள் தேவாரம்,திருவாசகம் பாட தடை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளனர்.தீக்ஷிதர்களின் இந்தப் போக்கு சிதம்பரம் மக்களிடையே பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தீக்ஷிதர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழுக்குத் தடை விதிக்கும் வகையில் அவர்கள் நடந்துகொண்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தொல். திருமாவளவன் கூறுகையில்,
தேவாரம், திருவாசகம் பாடித்தான், மூடியிருந்த நடராஜர் கோவில் கதவுகளைமாணிக்கவாசகர் திறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
தில்லை நடராஜரை, தமிழ் வளர்த்த கடவுள் என்றுதான் சிவனடியார்கள்வழிபடுகிறார்கள். சேக்கிழாரும், பிற சிவனடியார்களும், நடராஜரை தமிழில்தான் பாடிவழிபட்டு வந்துள்ளனர்.
அப்படி இருக்கையில், நடராஜர் பெயரைச் சொல்லிப் பிழைத்து வரும் தீக்ஷிதர்கள்,தமிழில் பாட தடை வாங்கி வைத்திருப்பது தமிழுக்கும், கடவுளுக்கும் செய்யும்துரோகம் ஆகும்.
மொழி மற்றும் இனம் மீது அதிக அக்கறை கொண்ட திமுக தலைவர் கருணாநிதியின்ஆட்சி நடைபெறும் இந்தக் கால கட்டத்தில் தமிழ் மொழிக்கு இப்படி ஒரு இழிவுநேருவது வேதனைக்குரியது.
தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான தீக்ஷிதர்களின் இந்தநடடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம். முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்திலஉடனடியாகத் தலையிட்டு, தமிழில் வழிபட்டால் தீட்டுப் பட்டு விடும் என தடைவாங்கியுள்ள தீக்ஷிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடத்த சட்டப்பூர்வ பாதுகாப்புகொண்டு வர வேண்டும். இதற்காக அவசரச் சட்டமோ, சட்டத் திருத்தமோ கொண்டுவரப்பட வேண்டும்.
தில்லை நடராஜர் கோவிலை தீக்ஷிதர்களிடமிருந்து மீட்டு இந்து சமயஅறநிலையத்துறை மூலம் பராமரிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications