20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது மேல்சபை
சென்னை:
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மேல் சபை அமைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம்சட்டசபையில் கொண்டு வரப்படவுள்ளது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.தமிழ்நாட்டில் 63 உறுப்பினர்களைக் கொண்ட மேல்சபை இயங்கி வந்தது. இதில் உள்ளாட்சி அமைப்புதொகுதிகளில் இருந்து 21 பேரும், சட்டசபை உறுப்பினர்கள் மூலம் 21 பேரும், ஆசிரியார்கள் தொகுதிகளில்இருந்து 6 பேரும், பட்டதாரிகள் தொகுதிகளில் இருந்து 6 பேரும் மேல்சபை உறுப்பினர்களாகதேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர தவிர கலை, இலக்கியம், அறிவியல், சமுதாய ப்பணி ஆகியவற்றில் ஈடுபடும் 9 பேரைகவர்னர் நியமனம் செய்து வந்தார். ஆனால், எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது மேல்சபையை கலைத்தார்.இதற்கான தீர்மானம் 1986ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மா.பொ.சி. மேல்சபைதலைவராகவும், கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர்.
கருணாநிதியின் பதவியை பறிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அவையையே கலைத்தார் எம்ஜிஆர்.
1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் மேல்சபை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1991ல் அதிமுக ஆட்சியின் போது இந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்து.
1996ல் மீண்டும் திமுக ஆட்சியில் மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்குஅனுப்பபட்டது. அதற்கான சட்ட முன் வடிவை கொண்டு வர மத்திய அமைச்சரவை 1997ல் முடிவு செய்தது.ஆனால் அதற்குள் மத்திய அரசு மாறிவிட்டது.
2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் மேல்சபை அமைக்கும் திட்டம் பரிசிலிக்கப்படவில்லை. 2006தேர்தலின் போது மீண்டும் மேல்சபைக் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படிமேல்சபையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வரும் 22ம் தேதி தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது. இந்த தொடரில் மேல்சபை மீண்டும்அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications