முருகன், நளினி உண்ணாவிரதம் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முருகனும், நளினியும்தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும்ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது மகள் அரித்ரா, இலங்கையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.தமிழகத்தில் மேற்படிப்பை தொடர ஆர்வமாக உள்ளார். ஆனால் அரித்ராவுக்கு விசாவழங்க இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முருகனும், நளினியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில்இறங்கினர். அவர்களது உடல் நிலை மோசமடைந்ததால் இருவரும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கும் இருவரும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர்மருத்துவமனைக்குச் சென்று முருகன், நளினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆட்சியர்இளநீர் தர அதை முருகனும், நளினியும் வாங்கிக் குடித்து உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் யாதவ் கூறுகையில், நான் அவர்களிடம்உறுதிமொழி எதையும் தரவில்லை . அரித்ராவுக்கு இலங்கையில் பாதுகாப்புஇல்லாததால், கல்வி விசா மூலமாகவோ அல்லது சுற்றுலா விசா மூலமாகவோ அவர்இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று முருகனும், நளினியும் கூறினார்கள்.

இதை மாநில அரசின் மூலமாக மத்திய அரசுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தேன்.இதை நம்பிய அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர் என்றார் யாதவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+