தீவிரவாதத்திற்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஜி 8 நாடுகள் ஆதரவு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஜி 8 நாடுகள் முழு ஆதரவுதெரிவித்துள்ளன. தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி 8அமைப்பின் ஒரு நாள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில்,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டன.ஜி 8 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ், ரஷ்ய அதிபர் புடின், ஜெர்மனி அதிபர் மெர்கல், சீன அதிபர் ஜூ ஜின் டாவோஉள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
ஜி 8 மாநாட்டின் நிறைவாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மும்பைகுண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீவிரவாதத்திற்குஎதிரான இந்தியாவின் போருக்கும் ஜி 8 தலைவர்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
கூட்டறிக்கையில் இடம் பெற்றிருந்த செய்தி:
மும்பை மற்றும் ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் கடும்கண்டனத்துக்குரியவை. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் நியாயம்உள்ளது. அதற்கு ஜி 8 நாடுகள் முழு ஆதரவு தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதத்தைப் பரப்பும் நாடுகளைஅனுமதிக்க முடியாது. அந்த நாடுகளை ஆதரிக்கவும் முடியாது. தீவிரவாதத்தைஆதரிக்கும் எந்த ஒரு நாட்டையும் சர்வதேச சமுதாயம் ஆதரிக்க முடியாது.
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பங்களில் உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு இந்த மாநாடு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு அனைத்து வகையிாலனஉதவிகளையும் செய்ய ஜி 8 நாடுகள் தயாராக உள்ளன. இந்தக் குற்றச்செயல்களில்ஈடுபட்டவர்களைப் பிடிக்கவும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களைஅடையாளம் காணவும், இன்னும் பிற உதவிகளையும் செய்ய ஜி 8 நாடுகள் தயாராகஉள்ளன.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தைஜி 8 நாடுகள் அமைப்பு வரவேற்கிறது. அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் இந்தியாகையெழுத்திடுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இதை நாங்கள் கருதுகிறோம்.
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்களை ஜி 8 தலைவர்கள் வரவேற்கிறார்கள்.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்கள் எந்தவிததடையுமின்றி தொடர ஜி 8 நாடுகள் விரும்புகின்றன.
பேச்சுவார்த்தைக்குக் குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களை இரு நாடுகளும்புறக்கணிக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் முதலாவது முத்தரப்புக் கூட்டம் ஜி 8மாநாட்டுக்கு இடையே நடந்தது.
இதில் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஹூ ஜின் டாவோ, பிரதமர் மன்மோகன் சிங்மற்றும் 3 நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மன்மோகன் சிங் ரஷ்யாவின் இன்டர்பேக்ஸ் நிறுவனத்திற்குஅளித்த பேட்டியில், பெருகி வரும் சவால்களை சந்தித்து வெற்றி பெற ரஷ்யா, சீனா,இந்தியா ஆகிய நாடுகள் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு 3 நாடுகளும் இன்னும் சிறந்த முறையில் இணைந்துசெயல்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். எல்லை தாண்டிய தீவிரவாதம்,போதைப் பொருள் கடத்தல், மத தீவிரவாதம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியநிலையில் மூன்று நாடுகளுமே உள்ளன.
மேலும் 3 நாடுகளும் பொருளாதார ரீதியிலும் இணைந்து செயல்படுவது காலத்தின்கட்டாயமாகும். வர்த்தகம், முதலீடு, வங்கி, போக்குவரத்து, விவசாயம், மின்சாரம்,உயர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 3 நாடுகளும் இணைந்து பணியாற்றவேண்டும் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications