இந்தோனேசிய சுனாமி: 310 பேர் பலி!
ஜாவா:
இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜாவாதீவில் சுனாமி அலைகள் தாக்கின. இதில் 310 பேர் பலியாயினர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கருகே கடலில் திங்கள்கிழமை பிற்பகல் 3மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோவிலில் இது 7.2 ஆகஇருந்தது. இதன் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.இதையடுத்து ஜாவா தீவில் வசிக்கும் மக்கள் கடலோரப் பகுதிகளை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஜாவா தீவு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது. அங்குபல வீடுகள் இடிந்துள்ளன.
நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி அலைகள் ஜாவா தீவின் பல பகுதிகளைதாக்கின. சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்ததால், கடல் நீர் தீவுக்குள்புகுந்தது. சியாமிஸ் என்ற நகரில் உள்ள பங்கதாரன் கடற்கரையில் உள்ள சுற்றுலாவிடுதியில் கடல் நீர் புகுந்தது.
இதில் அங்கிருந்த 40 பேர் பலியாயினர். அவர்களில் 37 பேருடைய உடல்கள்மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.கடலிலிருந்து 1 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.
பல கட்டடங்கள் இடிந்து விட்டன. இதேபோல மேலும் இரண்டு சுற்றுலா விடுதிகளில்சுனாமி அலை காரணமாக கடல் நீர் புகுந்ததில் 10 பேர் இறந்தனர். சுனாமி தாக்குதல்மற்றும் பூகம்பத்திற்கு மொத்தம் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுனாமி அலைகள் தாக்குதல் குறித்த செய்தி பரவியதால் ஜாவா தீவில் பெரும் பீதிஏற்பட்டது. மேலும் இந்தோனேசியா முழுவதும் பெரும் பதட்டம் காணப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில் ஜாவா, சுமத்ராஉள்ளிட்ட இந்தோனேசியாவின் பல பகுதிகளில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்ததுநினைவிருக்கலாம்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் பீதியடையாமல் இருக்குமாறு அந்நாட்டு அதிபர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்படுவது வழக்கமான சம்பவம்தான். ஆனால் 2004ம்ஆண்டு ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அடிக்கடி அங்குபூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் மத்திய ஜாவாவில் உள்ள யோக்யகர்தா நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில்5700 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, இந்தியாவில் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றுகூறப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான்தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். துறைமுகங்களில் எச்சரிக்கை விடப்பட்டது.பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இதேபோல பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலடிப்பட்டு பகுதியில் கடலோரம்வசிக்கும் மீனவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டனர்.
அதேபோல, வேம்பகீரப்பாளையம் கிராமத்தினரும் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்குச் சென்றனர். இங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லைஎன்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருந்தது.
காரைக்காலில் மாலையில் கடல் நீர் திடீரென உள் வாங்கியது. இதனால் கடற்கரைக்குகாற்று வாங்க வந்தவர்கள் பீதியடைந்து அங்கிருந்து ஓடினர். கடலும்கொந்தளிப்புடன் காணப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட 10 அடி வரை கடல் உள்வாங்கியது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் வழக்கமான நிலை திரும்பியது. அலைகளும் சற்றுவேகமாக இருந்ததால் மக்கள் பீதியடைந்து கடற்கரையிலிருந்து வெளியேறினர்.
இதேபோல நாகப்பட்டனத்திலும் கடல்கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால்கடற்கரைப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னையிலும், மெரீனா கடற்கரைக்கு வந்திருந்தவர்களை போலீஸார் அங்கிருந்துசெல்லுமாறு கூறியதால் மாலையில் மெரீனா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.இதே நிலைதான் தமிழகத்தின் பிற கடலோரப் பகுதிகளிலும் காணப்பட்டது.
இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட தமிழககடலோரப் பகுதிகளில் மக்கள் இரவு முழுவதும் பீதியுடன் கழித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications