வயிற்றில் இரட்டைக் குழந்தை: தப்பி ஓடிய கர்ப்பிணியால் பரபரப்பு!
சென்னை:
வயிற்றில் இரட்டைக் குழந்தை இருப்பதாக தெரிய வந்ததும், பிரசவ வலிக்குப் பயந்துகர்ப்பிணிப் பெண் வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பர்மா காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரதுமனைவி எலிசபெத் ராணி. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.இந்த நிலையில் ஆறுமுகம் தனது பெற்றோர் மற்றும் ராணியின் பெற்றோர்,சகோதரருடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துபுகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், இந்துவான நான் எனது மனைவியை மணப்பதற்காக கிறிஸ்துவராக மாறிமணந்தேன். இருவரும் திருமணத்திற்குப் பின்னர் சந்தோஷமாக குடும்பம் நடத்திவருகிறோம். எனது மனைவி மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்.
இந்த பயம் காரணமாக ஏற்கனவே இரண்டு முறை கர்ப்பம் தரித்தும் கரு கலைந்துபோய் விட்டது. பிரசவம் என்றாலே அவருக்கு மிகவும் பயம். இந்த நிலையில் 3வதுமுறையாக கர்ப்பம் தரித்தார் எனது மனைவி.
இந்த முறை எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் அவரைபார்த்துக் கொண்டோம். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 2 பெண்குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் நாங்கள் சந்தோஷமடைந்தோம். ஆனால் எனது மனைவி பயந்தபடிஇருந்தார். இரட்டைக் குழந்தைகள் இருப்பதால் பிரசவம் சிக்கலாகி ஏதாவது ஆகிவிடுமோ என்று அவர் பயந்தார். இந்த நலையில் 7வது மாதத்தில் அவர் வீட்டைவிட்டு ஓடி விட்டார்.
போலீஸ் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து அவரை மீட்டுக் கொண்டு வந்தோம்.இந்த நிலையில் அவரது பிரசவத்திற்கு நாள் குறித்தனர். முதலில் சுகப் பிரசவம்ஏற்படலாம் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால் பின்னர், இரட்டைக்குழந்தைகள் என்பதால் சுகப் பிரசவம் வேண்டாம், சிசேரியன் செய்வதே நல்லதுஎன்றனர்.
இதனால் எனது மனைவி பயந்து போனார். அவரை நான் சமாதானப்படுத்தி வீட்டுக்குஅழைத்து வந்தேன்.
இந்த நிலையில் எனது மனைவி மீண்டும விட்டை விட்டு ஓடி விட்டார்.
எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன்அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. அவரை மீட்டுத் தர வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
இந்த நூதன புகாரரைப் படித்த ஆணையர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்தப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்துதனிப்படை அமைத்து எலிசபெத் ராணியை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications