மருமகளிடம் செக்ஸ் கொடுமை: கணவரை பிரித்த மாமனார்
சென்னை:
தனது ஆசைக்கு நான் இணங்காததால் என் கணவரை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார் என மாமனார் மீதுமருமகள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
![]() |
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் நாகஜோதி (22). இவருக்கும் வாய் பேச முடியாத கிஷோர் குமார்என்பவருக்கும் 2005ல் திருமணம் நடந்தது. கடந்த மாதம் முதல் கிஷோர் குமார் வீட்டுக்கு வரவில்லை. தனதுபெற்றோர் வீட்டில் போய் தங்கிவிட்டார்.
இந் நிலையில் நாகஜோதி வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,
என் மாமனார் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். என் கணவருக்கு காது கேட்காது என்பதால் என்னிடம்அவர் முன்பாகவே மிக அசிங்கமாக பேசினார். என் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்வார்.
மாமனாரின் சில்மிஷங்களை கணவரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்தேன். இந் நிலையில்கருவுற்ற நான் மேல்மருத்துவத்தூரில் உள்ள எனது வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். ஆனால், என் கணவர் வீட்டுக்கு வராமல் தனது பெற்றோர் வீட்டில் போய்தங்கிக் கொண்டார். என்னைப் பற்றி தவறாக எதையோ சொல்லித் தான் என் கணவரை என் மாமனார்பிரித்திருக்கிறார் என்று புகாரில் கூறியுள்ளார் நாகஜோதி.
இதைடுத்து போலீசார் கிஷோர் குமாரை வரவழைத்து விசாரித்தபோது, நாகஜோதி நடத்தை சரியில்லாதவர் என்றுசைகையில் கூறியதோடு, அவருடன் வாழ மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
என் மாமனாரின் ஆசைக்கு நான் உடன்படாததால் தான் என்னைப் பற்றி இப்படி தவறாக சொல்லி என் கணவரைபிரித்துவிட்டார் என்று காவல் நிலையத்தில் நாகஜோதி கதறி அழுதார்.
இதையடுத்து இந்தப் பிரச்சனையை குடும்பத்துக்குள் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தி அவர்களை அனுப்பிவைத்தனர்.
மனைவி புகார்-காதலியுடன் கணவர் தற்கொலை:
இதற்கிடையே தன்னைப் பற்றி மனைவி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ததால் தனது களளக் காதலியுடன்கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்த ஆடிட்டரான சுரேஷ் (30) என்பவருக்கும் மீரா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்நடந்தது. திருமணத்துக்கு வந்த மீராவின் உறவினரான மைதிலி (24) என்பவருடன் சுரேசுக்கு திடீர் காதல்ஏற்பட்டது.
இதையடுத்து கணவரை பிரிந்தார் மீரா. இதுவே வசதியாகப் போய்விட்டதால், காதலி மைதிலியுடன்சென்னையில் குடியேறி வசிக்க ஆரம்பித்தார் சுரேஷ். கூடவே சுரேஷின் தாயார் பிரேமாவும் வசித்தார்.
இந் நிலையில் சமீபத்தில் திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது கணவருக்கு எதிராக மீரா மனு தாக்கல்செய்தார். இதையடுத்து திருச்சி போலீசார் சுரேஷை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர்.
விசாரணைக்காக சுரேஷ், மைதிலி, தாயார் பிரேமா ஆகியோர் திருச்சிக்கு காரில் கிளம்பினர். வழியில்குளிர்பானத்தில் விஷத்தை கலந்த சுரேஷ் அதை தானும் பருகிவிட்டு மைதிலி மற்றும் தாயாருக்கு தந்தார்.
இதை அருந்திய மூவரும் மயங்கினர். நெடுஞ்சாலையில் நெடு நேரமாக கார் நின்றிருப்பதை பார்த்த சிலர் அதைதட்டினர். ஆனால், மூவரும் மயங்கிக் கிடப்பது தெரியவந்ததும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், சுரேசும் மைதியிலும் வழியிலேயே இறந்துவிட்டனர். பிரேமாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications