ஜனனி விவகாரத்தில் சிக்கப் போகும் காக்கிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனனியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ. 30 லட்சம் கள்ள நோட்டு இருந்தது குறித்து 2எஸ்பிக்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தி பல போலீஸ் அதிகாரிகள்சிக்குவர்கள் என்று தெரிகிறது.

உயிர்த் தோழியின் கணவருக்கு வேண்டப்பட்ட ஜனனி, அதனால் ஏற்பட்ட மேலிடத்து பொல்லாப்பால் கஞ்சாவழக்கில் உள்ளே போனார்.

நடனராஜர் வாங்கித் தந்ததாகக் கூறப்படும் நீலாங்கரை பங்களாவில் தான் ஜனனி தங்கியிருந்தார். அவரதுவீட்டை அப்போது செங்கை கிழக்கு மாவட்ட உளவு போலீசாரை விட்டு கண்காணித்தார் உயிர்த் தோழி. ஜனனிவீட்டில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக உளவு போலீசார் தந்த தகவலின் அடிப்படையிலேயே போலீசைவிட்டு ரெய்ட் நடத்தினார்.

அங்கு ரூ.1.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஸ்ராஜாவின் பணம் என்றதுஜனனி தரப்பு.

இந் நிலையில் பிடிபட்டதில் ரூ. 30 லட்சம் கள்ள நோட்டாக இருந்துவிட, ஜமீன்தார் எஸ்கேப் ஆகிவிட்டார்.அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் திடீர் திரும்பமாக ஜனனி வீட்டில் பணத்தை கைப்பற்றிய மதுரை புறநகர் மாவட்ட அப்போதையஎஸ்பி அவிப்பிரகாஷ் (தற்போது கிருஷ்ணாகிரி எஸ்பி) மற்றும் செங்கை கிழக்கு மாவட்ட எஸ்பியாக இருந்தசங்கர் (தற்போது கரூர் எஸ்பி) ஆகியோரை சென்னைக்கு வரவழைத்த சிபிசிஐடி போலீசார் அங்கு வைத்துஅவர்களை துருவி எடுத்தனர்.

ஜனனி விவாகாரத்தில் போலீஸ் அதிகாரிகளிடமே சிபிசிஐடி விசாரணை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இவர்களது உயர் அதிகாரிகளாக இருந்தவர்களிடமும் விசாரணை நடக்கலாம் என்றுதெரிகிறது.

ஜனனி விவகாரத்தில் உண்மைகளை மறைத்து பொய்யாக கஞ்சா நாடகம் நடத்திய அதிகாரிகளும், உயிர்த்தோழியின் ஆலோசனைப்படி வழக்கை நடத்திய அதிகாரிகளும் இந்த விசாரணை வளையத்தில் வருவார்கள்என்று தெரிகிறது.

வீரப்பனை போட்டுத் தள்ளிய வீரதீர அதிகாரி தான் இந்த கஞ்சா டிராமாவுக்கே டைரக்டர் என்று கூறப்படுகிறது.இதனால் அவரும் சிக்கக் கூடும் என்கிறார்கள்.

ஜனனியிடம் சிக்கியது ஹவாலா பணமா?

இதற்கிடையே ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 1.40 கோடி பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் எனபோலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த கள்ள நோட்டுக்கள் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சர்ச்சைக்குரிய அந்தப் பணத்தை தங்களிடம்ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் போலீசார். இதற்கிடையே இந்தப் பணம் ஹவாலாபணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஹாவாலா கும்பல்களுக்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருந்து வருவதால் ஜனனியிடம் கைப்பற்றப்பட்டபணமும் விஐபிக்கள் மூலமாக வந்த ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+