லெபனானில் தவிக்கும் தமிழர்கள்: 12,000 இந்தியர்களை மீட்டு வர போர் கப்பல்கள் விரை
டெல்லி:
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள 12,000இந்தியர்களை மீட்டு வர 4 போர்க் கப்பல்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
பாலஸ்தீன-லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள்இஸ்ரேலிய சிறைகளில் அடைபட்டுள்ள நிலையில் ஒரு இஸ்ரேல் வீரரை லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதஅமைப்பு கடத்திச் சென்றது.இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் மிக பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராக்கெட், விமானகுண்டு வீச்சில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. நூற்றுக்கணக்கான பாலங்கள் உடைந்துள்ளன.
தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதே போன்ற தாக்குதலை பாலஸ்தீனத்தின்காஸா பகுதியிலும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களில் லெபனான், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு உலக அளவில் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் அமெரிக்காவின் மறைமுகஆதரவு இருப்பதால் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில் லெபனானில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர். பலகுடும்பங்கள் சிரியாவுக்குள் புகுந்துள்ளன.
அதே போல லெபனானில் உள்ள தனது நாட்டினரை இங்கிலாந்து தனது போர்க் கப்பல்கள் மூலம் வெளியேற்றிவருகிறது. இந் நிலையில் இந்தியாவும் சுமார் 12,000 இந்தியர்களை வெளியேற்றி பத்திரமாகக் கொண்டு வர 4போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. ஒரு கப்பலில் 1,000 பேர் வரை பயணிக்க முடியும்.
தவிக்கும் தமிழர்கள்:
லெபனானில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் சிக்கியுள்ளனர்.
கூலித் தொழிலாளர்களாக சென்றுள்ள இவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுஇஸ்ரேல் தாக்குதல் குறித்து வர்ணித்துள்ளனர். மேலும் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்குக் கொண்டு வரதமிழக அரசை தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.
விஜய்காந்த் கோரிக்கை:
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், லெனானில் கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்த 3,000 பேர் வசிக்கின்றனர். அவர்களை பத்திரமாக அழைத்து வரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications