மும்பை குண்டுவெடிப்பு: மிரட்டல் இ-மெயில் அனுப்பிய வாலிபர் கைது
போபால்:
மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்று லஸ்கர்-ஏ-கோகார் என்றஅமைப்பின் பெயரில் இ-மெயில் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜேக் ஸ்மித் என்பவர் பெயரில் பத்திரிக்கைகளுக்கு வந்த இ-மெயிலில்லஸ்கர்-ஏ-கோகார் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேர் தான் இந்த குண்டுவெடிப்பைநடத்தியதாகவும் அதில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரும் இறந்ததாகவும்கூறப்பட்டுள்ளது.மேலும் பல இடங்களில் இது போன்ற குண்டு வெடிப்புகள் நடக்கவுள்ளதாகவும் அந்தமெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் தாங்கள் தான் இந்தத் தாக்குதலைநடத்தினோம் என்பதற்கு ஆடியோ, வீடியோ ஆதரங்கள் இருப்பதாகவும் அதில்கூறப்பட்டிருந்தது.
இந்த மெயில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு இன்டர்நெட் கபேயில்இருந்து அனுப்பப்பட்டதாக முதலில் போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டுநடத்தப்பட்ட விசாரணையில் இது போபாலில் இருந்து வந்தது உறுதியானது.
இதையடுத்து மத்தியப் பிரதேச போலீசார் களமிறங்கி, சுமித் தம்ராகர் என்ற வாலிபரைகைது செய்துள்ளனர். போபாலின் ரிசால்தார் காலனி என் பகுதியைச் சேர்ந்தவர் இவர்.பரபரப்புக்காவே இவர் மெயில் அனுப்பியதாகத் தெரிகிறது.
இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந் நிலையில் குண்டு வெடிப்பில் பலியான ஒரு நபரின் உடலையாரும் இதுவரை வந்து பெற்று செல்லவில்லை. இந்த உடல் இன்னும் அடையாளம்காணப்படவில்லை.
இதனால் தாக்குதல் நடத்தியபோது பலியான தீவிரவாதியின் உடலாக இருக்கலாம்என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications