திருச்சி ரெளடியை என்கெளண்டரில் போட்டுத் தள்ள போலீஸ் திட்டம்?
பெரம்பலூர்:
என்னை என்கெளண்டரில் போட்டுத் தள்ள போலீசார் முயல்கின்றனர் என திருச்சியின்பிரபல ரெளடியான பட்டரை சுரேஷ் மிரண்டபடி கூறியுள்ளான்.
திருச்சியைச் சேர்ந்த பட்டரை சுரேஷ் (28) பிரபல ரெளடி முட்டை ரவியின்கூட்டாளி. உடையார் பேரவையின் மாநில துணை செயலாளராகவும் இருந்துவருகிறான். இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான சுரேஷ் ஜாமினில்வெளியே வந்து தலைமறைவாகிவிட்டான்.
திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாமிநாதனை துப்பாக்கியால் சுடமுயன்ற வழக்கில் இவனை போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இவனது ரெளடித்தனம் மிக அதிகமாக இருப்பதால் இவனை என்கெளண்டரில்போட்டுத் தள்ள போலீசார் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் பெரம்பலூர்குற்றவியல் நீதிமன்றத்தில் இவன் சரணடைந்தான்.
இவனை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துஇவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
முன்னதாக நீதிமன்றத்தில் நிருபர்களிடம் சுரேஷ் கூறுகையில்,
வழக்கறிஞர் ஜெய்சங்கர் கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்தஐந்து மாதங்களுக்கு முன் நான் ஜாமீனில் வெளியே வந்தேன்.
அன்று முதல் எந்த குற்றத்திலும் நான் ஈடுபடவில்லை, திருந்தி வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆனால், எனது தந்தை, தாய், என்தங்கை கணவர் மூவர் மீதும்கஞ்சா வழக்கு போட்டு போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
அதே போல என் மீதும் மூன்று பொய் வழக்குகள் போட்டுள்ளனர். என்னைபோலீஸார் என்கெளண்டர் செய்ய திட்டமிட்டு தனிப்படை அமைத்து தேடினர்.இதனால் தான் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்.
என்னை போலீஸார் போலீஸ் காவலில் எடுத்து சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்என்றான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications