ஸ்பென்சர் பிளாசா-அண்ணா பல்கலைக்கு குண்டுமிரட்டல்-புரளிகளால் திணறும் போலீஸ்-மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்ததகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக சரமாரியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு போலீஸாருக்குபெரும் தலைவலியைக் கொடுத்து வருகின்றன.

நடிகர் சிவக்குமாரின் ரசிகர் ஒருவர் கொடுத்த வெடிகுண்டு மிரட்டலால் சென்னை போலீஸார்எரிச்சலாகியுள்ளனர். அவர் மீது வழக்குப் போட்டுள்ள போலீஸார் மலேசியாவுக்குப் போய் அந்த நபரைப்பிடித்து கொண்டு வர படு தீவிரமாக உள்ளனர். இதேபோல சென்னை நகரில் பல்வேறு பள்ளிக் கூடங்களுக்கும்வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதுவும் ஒரு பெண் குண்டு மிரட்டல் விட்டதால் பரபரப்புஅதிகமானது.

இந் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக இன்று ஒரு மர்ம கடிதம் வந்தது. பெயர், முகவரி எதுவும்இல்லாத அந்தக் கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. எந்த நேரமும் அது வெடிக்கலாம் என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து மோப்ப நாய்கள், வெடிகுண்டு நபுணர்களுடன் போலீஸார் விரைந்துவந்தனர். பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் குண்டுஎதுவும் சிக்கவில்லை. இந்த புரளி காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பெரும்பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான ஸ்பென்சர் பிளாசாவில் இன்று பகலில் வெடிகுண்டுபுரளி கிளப்பப்பட்டது. இங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பெண்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.வந்தது. அதில் ஸ்பென்சர் பிளாசாவில் 2 நாளில் வெடிகுண்டு வெடிக்கும். எனவே நீங்கள் வேலைக்குப்போகாதீர்கள் என அதில் கூறப்பட்டிருந்தது. அந்த எஸ்.எம்.எஸ். டெல்லியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண்கள் இருவரும் ஸ்பென்சர் பிளாசா நிர்வாகத்தினருக்கு தகவல் தந்தனர்.போலீஸாருக்கும் தகவல் போனது. துணை ஆணையர் ராமசுப்பிரமணி தலைமையில் போலீஸாரும், வெடிகுண்டுநிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விரைந்து வந்தனர். ஷாப்பிங் வந்தவர்களும் கடைக்காரர்களும் பிளாசாவில்இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அனைவரும் அண்ணா சாலையில் கூடியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடைகள் முழுவதிலும்போலீஸார் தீவிர சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த வதந்தியால் ஸ்பென்சர்பிளாசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+