நிர்மலாவுக்கு நவீன் கொடுத்த சர்வீஸ் சார்ஜ்!
சென்னை:
![]() |
மதுதேவி தற்கொலை வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் சென்னை பல்கலைக்கழகதுணைவேந்தர் பி.டி.மனோகரன் வீட்டில் போலீஸார் இன்று சோதனை போட்டனர்.அப்போது, மதுதேவியிடமிருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பொருட்களைபட்டியல் போட்டு அவற்றைக் கைப்பற்றினர்.
இதற்காக அடையாறு உதவி கமிஷனர் ஹரி தலைமையிலான போலீஸ் படை சாஸ்திரிநகர் முதலாவது அவென்யூவில் உள்ள மனோகரன் வீட்டுக்கு இன்று சென்றது.
வரதட்சணைப் பொருட்களை அடையாளம காட்டுவதற்காக மதுதேவியின் தாயார்பூரணி, தாய்மாமன் ராஜாராம், உறவினர் சந்திரன் ஆகியோரையும் போலீஸார்அழைத்துச் சென்றனர்.
காலை 7 மணிக்கு போலீஸார் மனோகரன் வீட்டுக்குச் சென்றனர். மனோகரன், அவரதுமனைவி கனகவல்லி, மகள் உமா ஆகியோர் முன்னிலையில் போலீஸார் வீடு முழுக்கசோதனை போட்டனர். வரதட்சணைப் பொருட்களை பூரணி அடையாளம் காட்டினார்.
அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் பணிநடந்தது.
கைப்பற்றப்பட்ட பொருட்களை சூட்கேஸ்களிலும், அட்டைப் பெட்டிகளிலும்அடைத்து மினி லாரியில் போலீசார் ஏற்றிச் சென்றனர். இந்த சோதனையில் நகைகள்எதுவும் கைப்பற்றப்படவில்லை.
திருமணத்தின்போது 500 பவுன் நகையும், ரூ. 25 லட்சம் ரொக்கமும் மேலும்ஏராளமான வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள், பட்டுப் புடவைகள்கொடுத்ததாக மதுதேவியின் பெற்றோர் கூறியிருந்தனர். ஆனால் அதில் கால்வாசிப்பொருட்களை மட்டுமே இன்று போலீஸாரால் மீட்க முடிந்தது.
இதுகுறித்து உதவி ஆணையர் ஹரி கூறுகையில், 20 பட்டுப் புடவை உள்ளிட்ட 48புடவைகள், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்களை மட்டுமே மீட்டுள்ளோம்.மற்றவை என்னவாயின என்று தெரியவில்லை. நகை, பணம் கிடைக்கவில்லை.அவை குறித்து மனோகரன் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிப்போம் என்றார்.
![]() |
| பிடி மனோகரன் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருள்கள் |
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அடங்கிய மினி லாரி அடையாறு காவல் நிலையம்கொண்டு செல்லப்பட்டது. அங்கு மனோகரன், அவரது மனைவி, மகள் ஆகியோர்வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது.
பின்னர் நடிகை நிர்மலாவும் வந்து கையழுத்துப் போட்டார்.
வீட்டில் சோதனை நடந்தபோது உடன் இருந்த மதுதேவியின் உறவினர் சந்திரன்கூறுகையில், மதுதேவியை துணைவேந்தர் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்கபோனபோது நானும் அங்கு இருந்தேன்.
அப்போது நவீன்குமார் பழனிக்கு மாலை போட்டு பக்திப் பழமாக காட்சி அளித்தார்.நவீன்குமாரின் அம்மா, எங்களுக்கு மகள் போல ஒரு மருமகள் வேண்டும் என்றுரொம்ப உருக்கமாக பேசினார். அவர்களது நடவடிக்கைகள் பிடித்துப் போனதால்தான்பெண்ணைக் கொடுக்க முடிவு செய்தோம்.
விருப்பபடி வரதட்சணை கொடுங்கள் என்றனர். பின்னர் தி.நகரில் வைத்து பெண்பார்த்தனர். அவர்களுக்கும் பிடித்துப் போனதால் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடுசெய்தோம். நிச்சயதார்த்தத்திற்கு 100 பேர் வரை வருவார்கள் என்றனர். ஆனால்வந்ததோ 12 பேர்தான்.
![]() |
அதற்கு அவர் எங்களது தகுதிக்கு 500 பவுன் நகையும், ரூ. 25 லட்சம் ரொக்கம்தந்தால்தான் நன்றாக இருக்கும் என்றார். சரி என்று ஒத்துக் கொண்டோம்.
அப்படிக் கேட்டுக் கேட்டு வாங்கியவர்கள் இன்று அதில் 25 சதவீதத்தை மட்டுமேதிருப்பிக் கொடுத்துள்ளனர். மிச்சத்தைக் காணவில்லை. 501 பாத்திரம் கொடுத்ததில்இன்று 40 மட்டுமே மீதம் உள்ளது. 100 பட்டுப் புடவை கொடுத்தோம். சொற்பம்தான்இப்போது மீதம் உள்ளது.
மதுதேவி இறந்ததும், 3 நாட்கள் கழித்து நிர்மலாவிடம் போனில் பேசினேன்.மதுதேவியின் நகைகள், பணத்தை உங்களிடம் நவீன்குமார் கொடுத்தாரே, அவைஎங்கே என்று கேட்டேன்.
அதற்கு அவர், நான் நிவீன்குமாருக்கு செய்த சர்வீசுக்கு அவர் கொடுத்தகட்டணம்தான் அது என்று கூறி விட்டார் என்றார் சந்திரன்.
பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் வைத்து நிர்மலாவிடம் இன்று 2வது நாளாகபோலீஸார் விசாரணை நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
இந்த விசாரணையின்போது எனக்கும், நவீன்குமாருக்கும் இடையே தவறான உறவுஎதுவும் இல்லை, மதுதேவியை நான் பார்த்தது கிடையாது. நவீன்குமாரிடமிருந்துபணம் எதையும் பெறவில்லை என்றார் நிர்மலா.
பெற்றோர் ஊரில் இருக்கும்போது எதற்காக தனி வீட்டில் தங்கியுள்ளீர்கள் என்றகேள்விக்கு, நான் ஒரு நடிகை, எனக்கு தனிமை அவசியம். அதனால்தான்தனிமையில் தங்கினேன் என்றார்.
தனிமையில் வசிக்கும் நிர்மலாவுக்கு நவீன்குமார் தவிரவும் ஏராளமான ஆண்கள்தொடர்பு இருந்துள்ளதை அருகாமை வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications